இளையராஜா சொல்ல சொல்ல கேட்காத பாரதிராஜா… கடைசியில் என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை திரைப்படம் வெளியாகி 38 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா கிராமியக் கதையாடல்களை சினிமாவில் கொண்டு வந்ததில் மிக முக்கியமானவர். இந்திய நிலம் கிராமங்களால் உருவானது. இந்தக் கிராமங்களுக்கு உள்ளிருந்துதான் உலகத் தரம் வாய்ந்த கதைகளை இயக்கியிருக்கிறார்கள் பல இயக்குநர்கள்.

அதே நேரத்தில் சினிமாவில் ஒரு பக்கம் நகர வாழ்க்கை சித்தரிப்புகள் அதிகரித்து வரத்தொடங்கியிருந்தன. நகரங்களை கிராமங்களுக்கு எதிராகக் காட்டும் கதையாடல்கள் அதிகரித்து வந்தன. சினிமாவில் மட்டும் இல்லை, எந்த ஒரு கலையும் அதன் கதையாடல் முறைகளை வடிவங்களை அதன் பூர்வீக நிலங்களில் இருந்தே பெறுகிறது.

உதாரணமாக இன்று ஒரு படத்தின் திரைக்கதை மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது. கதையின் தொடக்கம் , மையப் பிரச்னை மற்றும் கடைசியாக தீர்வு. ஒரு படத்தின் திரைக்கதை இந்த மூன்று பாகங்களாக பிரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த தியரிகளைப் பற்றிய எந்தவித அறிதலும் இல்லாமலேயே நமது கிராமங்களில் வாய்மொழியாக சொல்லப்பட்டு வந்த கதைகள் இந்த அம்சங்களைக் கொண்டிருந்தன.

இந்த அம்சத்தை தனது கதைகள் வழியாக குறிப்பாக முதல் மரியாதை திரைப்படத்தின் வழியாகக் காட்டியவர் பாரதிராஜா. பாரதிராஜா எப்போதோ பார்த்திருந்த ஒரு அயல் சினிமாவில், ஒரு முதிய வயது ஓவியனுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது. இதைப் போலவே ஜெயகாந்தனின் ‘சமூகம் என்பது நாலுபேர்’ என்கிற நாவலின் மையக்கருவும் இதுதான்.

இந்த இரண்டு படைப்புகளின் அடிப்படையை வைத்து ஒரு புதிய கதையை உருவாக்கச் சொல்லி தனது ஆஸ்தான கதாசிரியரான ஆர்.செல்வராஜை கேட்கிறார் பாரதிராஜா. அது தான் முதல் மரியாதையாக மாறியது. பாரதிராஜா முதல் மரியாதை படத்தில் ஒரு வயதான நபருக்கும் இளம் நங்கைக்கும் இடையே இருக்கும் காதலை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். அதனால் சினிமா பிரபலங்கள் மத்தியில் பாரதிராஜா மீது பெரிய அதிருப்தி ஏற்படுத்தியது.

அனைவருமே இந்த படத்திற்கு எதிராக நின்றனர். குறிப்பாக இளையராஜா இந்த படத்தின் முதல் பிரதியை பார்த்துவிட்டு படம் சுத்தமாக நல்லாவே இல்லை என்று வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். படம் சற்று பழமையான கதையாக இருப்பதாகவும், தனக்கு படம் பிடிக்கவில்லை என்றும் பாரதிராஜாவிடம் கூறினாராம். ஆனால் பாரதிராஜாவின் நச்சரிப்பிற்காக கடமைக்கு இசையமைத்தவர் இளையராஜா.

இப்படி அனைவருமே தனக்கு எதிராக நிற்கும் போதும் பாரதிராஜா துவண்டு போய் நிற்கவில்லை.
ஒரு அழகான காதல் கதையை அந்த இருவரை வைத்து நினைத்து விட்டேன். அதனால் இந்த படத்தை கண்டிப்பாக எடுக்கத்தான் போகிறேன் என்று மிகவும் தைரியமாக எடுத்தார் பாரதிராஜா. படம் வெளியாகி பெரிய ஹிட்டானது. தியேட்டர்களில் 125 நாட்கள் ஓடியது.

படத்தின் பாடல் என்று பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களை 85 காலகட்டத்தில் முணுமுணுக்க வைத்ததது. படத்தில் பாடல்களை எழுதிய வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா ஆகியோருக்கு தேசிய விருதும் கிடைத்தது. மண்ணின் மனத்தோடு எடுக்கப்பட்டதால், இன்றைக்கும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள்.