LKG,UKG பசங்களை வெச்சுகிட்டு விஜய் அடிக்கும் கூத்து… கேலி கூத்தானது விஜய் பாடசாலை திட்டம்..

0
Follow on Google News

விஜய மக்கள் இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் இரவுநேர பாடசாலை திட்டம் காமராஜர் பிறந்த தினத்தில் தொடங்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்த அறிவிப்பு ஆரம்பத்தில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் அந்த திட்டம் தொடங்கிய பின்பு, விஜயின் அரசியல் நகர்வு என்பது ஒரு அனுபவம் இல்லாத, ஒரு கத்துக்குட்டி விளையாட்டாக மாறி உள்ளது, நகைப்புக்குரிய சம்பவமாக பார்ப்பவர்களை கேலி கிண்டல் செய்ய வைத்துள்ளது.

பணத்தை செலவு செய்து விளம்பரத்திற்காக ஒரு செயலை செய்வது என்பது அந்த திட்டத்திற்கான பலனையும் வெற்றியையும் தராது. அந்த வகையில் மக்கள் பலனடைய கூடிய வகையில் செய்யக்கூடிய ஒரு சேவையை எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு திட்டமிடல் இருக்க வேண்டும். அந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே ஒரு தொலைநோக்கு பார்வையுடன் தொடங்க வேண்டும்.

ஆனால் யாரோ பின்னால் இருந்து அதை செய்வோம், இதை செய்வோம், என சொல்கிறார் என தொடங்கியுள்ள இரவு பாடசாலை திட்டத்தின் பயில கூடிய மாணவர்கள் புகைப்படம் வெளியானது, அதில் பால்வாடி, LKG, UKG, படிக்கும் குழந்தைகளை அழைத்து இரவு பாடசாலை எப்படி வெற்றிகரமாக செயல்படுகிறது என விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் வெளியிட்டு விளம்பரம் செய்து வருவது,இது விளம்பரத்திற்காக எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் தொடங்கப்பட்ட திட்டம் என்பது அம்பலமாகியுள்ளது.

ஏழை மாணவர்கள் எத்தனையோ நபர்கள் குரூப் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள், அதேபோன்று நீட் தேர்வுக்கு ஏழை மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வெளியில் பணம் செலவு செய்து தனியாக கோச்சிங் கிளாஸ் போக முடியாத கஷ்டத்தில் வீட்டிலே படித்து கொண்டிருக்கிறார்கள். அப்படி கஷ்ட்டப்படும் மாணவர்களை தொகுதி வாரியாக கண்டெடுத்து, அவர்களுக்கு சிறப்பு ஆசிரியரை நியமனம் செய்து விஜயின் இரவு பாடசாலை திட்டம் என்பது செயல்பட்டால் அது உண்மையிலேயே ஒரு அர்ப்பணிப்பான ஒரு செயலாகவே மக்கள் மத்தியில் பாராட்டும் வகையாக இருக்கும்

ஆனால் தொகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும் பால்வாடி, எல்கேஜி யுகேஜி படிக்கும் குழந்தைகளுக்கு எதற்காக இரவு பாடசாலை திட்டம், விஜய் தொடங்கியுள்ள இரவு பாடசாலை திட்டத்தில் படித்து ஒரு மாணவன் அதை விட்டு வெளியே வரும் போது ஒரு அதிகாரியாக, நான் விஜய் அண்ணா தொடங்கிய இரவு பாடசாலை திட்டத்தின் மூலம் இன்று உயர்ந்து நிற்கிறேன் என்று பெருமைப்படுத்த வேண்டும்.

ஆனால் விளம்பரத்திற்காக ஒரு திட்டத்தை தொடங்கி, அது தொகுதியில் உள்ள சிறுவர்களை அழைத்து புகைப்படம் பிடித்து விளம்பரப்படுத்துவதால் அந்தத் திட்டமே மிகப்பெரிய கேலி கிண்டலுக்கு தற்பொழுது உள்ளாகியுள்ளது. மேலும் விஜய் எந்த ஒரு செயலையும் திட்டமிடல் இல்லாமல், தொலைநோக்கு பார்வை இல்லாமல், அந்த நேரத்தில் மீடியாவில் முக்கிய செய்தியாக இடம்பெற்று பப்ளிசிட்டி தேடி தந்தால் போதும் என்பது போன்று உள்ளது.

மேலும் விஜய் தன்னை சுற்றி அறிவு சார்த்த, எந்த ஒரு செயலையும் திட்டமிடலுடன் , தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும் , குறிப்பாக விசில் அடிக்கும் ரசிகர்கள் விஜய் படம் வெளியாகும் போதும், கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யவும், விஜய் படத்தை திரையில் கொண்டாடவும் தான் பயன்படுவார்கள், இவர்களை வைத்து கொண்டு விஜய் அரசியலில் இறங்குவது என்பது, நீச்சல் தெரியாதவன் கிணற்றில் குதிப்பது போன்றாகி விடும் என விமர்சனம் எழுந்துள்ளது.