வசூலில் பலத்த அடி வாங்கிய லியோ… இருக்கிற இடம் தெரியாமல் கப் சிப் ஆன லியோ படக்குழு…

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் அலைமோதிக் கொண்டிருக்கும் நிலையில், படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே வசூல் சாதனையைப் படைத்து விட்டதாக அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. லியோ திரைப்படத்தைத் தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால், அதன் பிறகு, படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தத் தகவலையும் வெளியிடாமல் வைத்திருக்கிறது. மற்றொரு பக்கம் லியோ படக்குழுவினரும் வாயைத் திறக்காமல் கப்சிப் என்று அமைதியாக உள்ளனர். இதனால் இப்போது லியோ படத்தின் வசூல் குறித்து இணையத்தில் பலவிதமாக தியரிகள் உருட்டப்படுகின்றன.

கோடிக்கணக்கான ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு, லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து மீண்டும் இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் மற்றும் நடிகர் விஜய் காம்போவில் உருவாகியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லியோ படத்தில் LCU இருக்குமா இல்லையா என்ற ஹைப்பிலேயே ரசிகர்கள் பலரும் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில், லியோ படத்தை தியேட்டர்களில் பார்த்த பெரும்பாலானோர் முதல் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், இரண்டாம் பாதியில் சண்டைக் காட்சிகளே அதிகம் இருப்பதாகவும், அதனால் படம் இழுவையாய் இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

அதேசமயம், LCU வை எதிர்பார்த்து சென்ற ரசிகர்கள், லியோ படத்தில் LCU திணிக்கப்பட்டிருப்பதாகவும், கதையோடு ஒன்றவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, லியோ படம் ‘ஆஹா ஓஹோ’ என்றளவிற்கு இல்லையென்றாலும், ‘ஒரு டைம் பார்க்கலாம்’ என்றவிளவிற்கு இருப்பதாகத்தான் பெருவாரியான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல், லியோ ரிலீஸ் ஆன நாளில் இருந்து சோஷியல் மீடியாக்களில் விஜயை கலாய்த்தும், படத்தில் உள்ள பிழைகளை ட்ரோல் செய்தும் மீம்ஸ்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகின்றனர். இப்படி சோஷியல் மீடியா, ஆடியன்ஸ் என அனைத்துத் தரப்பினரிடமும் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் லியோ படம் எப்படி வசூல் சாதனை செய்ய முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், தானாக வந்து முதல் நாள் வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம், இப்போது ஏன் அடுத்தடுத்த நாளில் லியோ செய்த வசூல் குறித்து வாயைத் திறக்காமல் உள்ளது என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக, ஷாருக்கான், ரஜினி ரசிகர்கள், லியோ படத்தில் வசூல் அறிவிப்பு குறித்து கலாய்த்து வருகின்றனர். அதாவது, இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படம் 10 ஆயிரம் ஸ்க்ரீன்களில் வெளியானது.

அந்த படம் பண்ணாத வசூலையா, அதை விட குறைவான ஸ்க்ரீன்களில் வெளியாகிய லியோ வசூல் செய்து விட்டது என்று கேள்வி எழுப்புகின்றனர். அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு முதல் நாள் புக்கிங்கை மட்டுமே முதலில் பல திரையரங்குகளும் ஓபன் செய்திருந்தனர். ஒட்டுமொத்த ரசிகர்களும் படத்தை பார்க்க டிக்கெட்டுகளை வாங்க வைத்து பின்னர் தான் அடுத்தடுத்த நாட்களுக்கான டிக்கெட் புக்கிங்கையே ஓபன் செய்திருந்தனர் என்றும் அதன் காரணமாகத்தான் முதல் நாள் அதிக வசூல் வந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதெல்லாத்தையும் விட, LCU எதிர்பார்ப்பினாலேயே படம் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்திருக்கும் என்றாலும், 2 வது நாளான வெள்ளிக்கிழமை லியோ படம் எதிர்பார்த்த வசூலை கொடுத்திருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டாவது நாளில் நூறு கோடி வசூலைக் குவித்திருந்தால், தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் என்றும், ஆனால், வெறும் 66 கோடி மட்டுமே வசூல் செய்ததால், வெளியே சொல்ல முடியாமல் படக் குழுவினரும், தயாரிப்பு நிறுவனமும் திக்குமுக்காடிப் போயுள்ளனர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இப்படி லியோ படத்தின் வசூல் குறித்து ஆளாளுக்கு ஒன்று பேசி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் சனி மற்றும் ஞாயிறு வசூலுடன் சேர்த்து திங்கட்கிழமை ஒட்டுமொத்தமாக 300 கோடி வசூலை கடந்தது என முதல் வார அறிவிப்பை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ரஜினி மற்றும் ஷாருக்கான் ரசிகர்கள் லியோ 2ம் வாரத்தில் ஜெயிலர் போலவோ, ஜவான் மற்றும் பதான் போலவோ ஓட வாய்ப்பில்லை என்று காட்டமாக தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் இணையத்தில் அவர்களது தரப்பைக் கூறினாலும், கலவையான விமர்சனக்ளைப் பெற்று வரும் லியோ, என்ன மாதிரியான வரவேற்பை இந்த விடுமுறை நாட்களில் பெறுகிறது என்பதை பொறுத்துத் தான் வசூல் நிலவரம் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.