தமிழ் சீரியல் முதல் ஹாலிவுட் வரை ஒவ்வொரு கட்சியாக சுட்டு எடுக்கப்பட்ட லியோ….

0
Follow on Google News

பழைய படத்தின் கதைகளை காப்பியடித்து படம் எடுப்பதில் பெயர் பெற்றவர் இயக்குனர் அட்லீ. அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தெறி ஆகிய முதல் இரண்டு படங்களில் பழைய படத்தின் கதையை மட்டும் காப்பியடித்து வந்த அட்லீ இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான மெர்சல் மற்றும் பிகில் படத்தில் பல காட்சிகள் ஹாலிவூட் படத்தில் இருந்து காப்பியடித்த சம்பவமும் அரங்கேறியது.

மற்ற படத்தின் கதை மற்றும் காட்சிகளை காப்பியடித்து மாட்டி கொண்டாலும், சிறிதும் வெட்கப்படாமல் தன்னுடைய படத்தின் கதைக்காகவும், அதில் இடம்பெற்ற கட்சிகளுக்காகவும், பல நாட்கள் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டது போன்று மேடைகளில் பேசுவார் அட்லீ. மேழ்மம் சினிமாவில் 7 ஸ்வரங்கள் தான் உள்ளது, அதனால் இந்த ஏழு ஸ்வரங்கள் சுற்றி சுற்றி மீண்டும் மீண்டும் வரும், அந்த ஏழு ஸ்வரங்களை தாண்டி எதுவும் செய்ய முடியாது என கதையை காப்பியடிப்பதை கூச்சமே இல்லாமல் நியாய படுத்தி பேசி வருகின்றவர் அட்லீ.

இந்நிலையில் இன்று தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களில் நம்பர் ஒன் இயக்குனராக இருந்து வருகிறவர் லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்திற்கு பின்பு அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியது, வித்தியாசமான படைப்பு, புதிய காட்சிகள் மற்றும் மற்றும் கதைக்களம் என லோகேஷ் இதுவரை இயக்கிய படங்கள் மூலம் சேர்ந்து வைத்திருந்த அருமை பெருமையெல்லாம் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் மூலம் மொத்தமும் பறிபோகி விடும் சூழல் உருவகியுள்ளது.

லியோ படத்தில் கதையை மட்டுமில்லை, சில காட்சிகள் சிறிதும் மாற்றம் இல்லாமல் அப்படியே பல படங்களில் இருந்து சுட்டு காப்பியடித்துள்ளது அம்பலமாகியுள்ளது.லியோ படத்தில் காபி ஷாப்பில் ஒரு சண்டைக் காட்சியும், மார்கெட்டில் ஒரு சண்டைக் காட்சியும், சஞ்சய் தத் அவர்களுடன் ஒரு சண்டைக் காட்சியும், பிளாஷ்பேக் காட்சியில் ஒரு சண்டைக் காட்சியும், கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு சண்டைக் காட்சியும் உள்ளது.

இதில் காபி ஷாப் சண்டைக் காட்சியில் மிஷ்கின் மற்றும் சான்டி மாஸ்டர் இருவருடன் விஜய் சண்டையிடுவது போல இந்த சண்டைக் காட்சி இடம்பெற்று இருக்கும். இதே காட்சி தெலுங்கு சினிமாவில் நடிகர் ஜெகபதி பாபு நடிப்பில் 2010ம் ஆண்டில் காயம் 2 திரைப்படத்தில் வருவது போலவே காபி ஷாப் சண்டைக் காட்சி போன்று அப்படியே காப்பியடித்து லியோ படத்தில் இடம்பெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது. தற்பொழுது காயம் 2 படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்ட லியோ பட காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படத்தின் காட்சிகளை மட்டுமில்லை, மெகா சீரியலில் இருந்து கதைகளையும் சூட்டு லியோ படம் எடுக்கப்பட்டுள்ளது என கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. லியோ படத்தின் இரண்டாம் பாதியில் வில்லன்கள் தொடர்ந்து விஜயை நீதான் லியோவா.? நீ தான் லியோவா.? என்று தொடர்ந்து டார்ச்சர் செய்து வருவது போன்ற காட்சிகள் இருக்கும்,

அதாவது விஜய் தான் லியோவா என்று கண்டுபிடிப்பதற்காக தொடர்ந்து விஜயை கடுமையாக தொந்தரவு செய்யும் வில்லன்கள், அவருடைய மனைவி அவருடைய குடும்பம் என அனைவரையும் கடுமையான தொந்தரவு செய்து வருகிறார்கள், மேலும் விஜயின் நண்பர்களையும் கொலை செய்கிறார்கள். அதாவது விஜய் தான் லியோ என்பதை கண்டுபிடிப்பதற்காக பல யுக்திகளை கையாளுகிறார்கள் வில்லன்கள். ஆனால் இந்த முட்டாள் வில்லன்கள் ஒரு DNA டெஸ்ட் செய்திருந்தால் இவர் தான் லியோவா என்று அந்த வில்லன்கள் கண்டுபிடித்து இருப்பார்கள்.

அந்த அளவுக்கு லாஜிக்கே இல்லாமல் லியோ படம் செல்வதை பார்க்கும் பொழுது இந்தப் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் படத்தின் கதையை மட்டும் வைத்து இந்த படத்தை எடுத்த மாதிரி தெரியலை, விஜய் டிவியில் மிக பரபரப்பாக ஓடிய பாரதி கண்ணம்மா சீரியலை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி லியோ படத்தை எடுத்திருக்கலாம் என கிண்டல் செய்யப்பட்டு வரும் நிலையில்.

ஆக மொத்தத்தில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் மெகா சீரியலில் கதைகளையும் தெலுங்கு படத்திலிருந்து காட்சிகளையும் ஆங்கிலப் படத்தில் இருந்து கதையின் கருவையும் சுட்டு காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ள லியோ படத்தை பல ஆதாரங்களுடன் நெட்டிசன்கள் அம்பலப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.