விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவர் நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார்.
சமீபத்தில் கூட இவர் தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். முதியோர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்தி குடுப்பது வெண்டிலேட்டர் உட்பட உயிர்காக்கும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ தேவைக்காக மக்கள் பயன்படுத்த ஆட்டோ வழங்குவது என பல சமூக சேவைகளை செய்துவருகிறார் பாலா.
பாலா சிறந்த நடிகர், காமெடியன் என்பதை தாண்டி, மனிதநேயம் மிக்கவர் என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தை தன்னுடைய குடும்பத்திற்கு சேர்த்து வைப்பவர்கள் மத்தியில், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை, ஏழை எளிய மக்களுக்கு செலவழித்து வருகிறார். இதுவரை மலை கிராம மக்களுக்கு உதவும் நோக்கிலும், ஆதரவற்றோருக்கு உதவும் நோக்கிலும், ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ள பாலா, மழை வெள்ளம் சென்னை பகுதியை சூழ்ந்த போது , தன் கையில் இருந்த மொத்த பணத்தையும், ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார்.
கடந்த ஆண்டு முதல் நடிகர் பாலா, தன்னுடைய சொந்த செலவில் ஏழைகள் மற்றும் முதியோருக்கும் உதவும் விதமாக இலவச ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து உதவி வருகிறார். அதன்படி முதலில் அறந்தாங்கியில் முதியோர் இல்லம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, பின்னர் மலை கிராமம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்தார், மூன்றவதாக சோளகர் என்கிற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தார். பின்னர் வாணியம்பாடி அருகே மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்துகொடுத்து உதவினார்.
இப்படி இதுவரை தனது சொந்த செலவில் 5 ஆம்புலன்ஸுகளை வாங்கி கொடுத்துள்ள பாலா, தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அந்த ஐந்து ஆம்புலன்ஸ் உடன் எடுத்த புகைப்படங்களை மொத்தமாக பதிவிட்டு, அவை தான் தன்னுடைய 5 குழந்தைகள் என குறிப்பிட்டு உள்ளார். இப்படி ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுக்கும் நடிகர் பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
மேலும் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள யூரோ கிட்ஸ் என்ற தனியார் பள்ளியில் இளைய தலைமுறையும், இந்தியாவும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பாலா, “மொத்தம் பத்து என்ற இலக்கு வைத்து தற்போது ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளேன், மேலும் ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துவிட்டு, தொடர்ந்து அடுத்த அடுத்த இலக்குகள் வைத்து அதை நோக்கி பயணிக்க உள்ளேன், பிரைவேட் ஐடிவிங்க் என்ற பெயரில் காசு கொடுத்து கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். அந்த பணத்தை கொடுத்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம், அந்த பணத்தை தன்னிடம் கொடுத்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வேன்” என்றார் பாலா.
பாலாவின் இந்த மனித நேயமிக்க எண்ணம் கோடிகளில் புரளும் ஒவ்வொரு நடிகர்களுக்கு வந்தால், பல ஏழை எளிய மக்கள் பலன் அடைவார்கள், அந்த வகையில் பாலாஅவர் சம்பாரிக்கும் மொத்த பணத்தையும் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வருவது கோடிகளில் புரளும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு பாடமாக அமைத்துள்ளது குறிப்பிடதக்கது.