நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடி கொண்டிருக்கிறது என்று சொல்வதை விட , அந்த படத்தை பார்க்க வந்த மக்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு படம் உள்ளது. கங்குவா படத்தில் ஐந்து தீவுகள் உள்ளது. ஐந்து தீவிலும், ஐந்து விதமான மக்கள், ஐந்து விதமான தப்ப வெப்தில் மக்கள் வாழ்கிறார்கள்.
அதில் ஒரு தீவுக்கு சூர்யாவும் மற்றொரு தீவுக்கு பாபு தீவில் கட்டுப்பாட்டில் உள்ளது. ரோமானியாவில் இருந்து இந்தியாவை நோக்கி ஒரு பெரும் படை வருகிறது. அவர்கள் தங்களுடைய படையை அமைப்பதற்கு ஒரு தீவு வேண்டும் என்று முடிவு செய்யும் பொழுது, சூர்யா இருக்கும் தீவை கைப்பற்றுவதற்காக அந்த தீவு உள்ளே இருக்கும் இன குழுவுக்கு இடையே பணத்தை கொடுத்து மோதலை உருவாக்குகிறார்கள்.
இந்த நிலையில் ரோமானியா படையினர் இந்த தீவை கைப்பற்றினார்களா என்பதை தாண்டி, சூர்யாவுக்கும் வில்லன் பாபு திவிலுக்கும் இடையிலான இனச் சண்டை உச்சகட்டத்தை ஏற்றுகிறது. படத்தின் ஒரு 80 சதவீதம் தொடர்ந்து இந்த இன சண்டை தான் நடைபெற்று வருகிறது. ஒரு கட்டத்தில் பார்ப்பதற்கே அலுப்பு தட்டி விடுகிறது. அந்த அளவிற்கு இந்த படம் முக்காவாசி இனச் சண்டையாக இருக்கிறது.
இந்த படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட அந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா, 2000 கோடி அடிக்கும் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நடிகர் சூர்யா இந்த படத்தை பார்க்கின்றவர்கள் வாயை பிளந்து பார்ப்பார்கள் என்றால், அப்படி வாயை பிளக்குற மாதிரி எந்த காட்சியும் இல்லை. குறிப்பாக படம் மொக்கையாக இருந்தாலும் சில படம் நல்ல தூக்கம் வரும்.
ஆனால் கங்குவா அதற்கும் வழி இல்லாமல் செய்து விட்டது. படத்தில் கத்தி கொண்டே இருந்தால் எங்கே வாயை பிளந்து தூங்குவது. அந்த அளவுக்கு இரைச்சல் சத்தம் படம் முழுவதும் அதிகமாக இருந்தது. அதாவது இந்த படத்தின் இசை அமைப்பாளர் இசை கருவியை மட்டும் பயன்படுத்தாமல், அடுப்பு அறையில் உள்ள தோசை கரண்டி, அண்டா, குண்டா என அனைத்தையும் பயன்படுத்தி இருப்பார் போல. அந்த அளவுக்கு இரைச்சல் காது வலிக்கிறது.
இது மாதிரியான படங்கள் ஹிந்தியிலும் ஹாலிவுட் பல படங்கள் வெளியாகி விட்டதால் இது பார்த்து பார்த்து சலித்த படம் தான், ஆனால் தமிழுக்கு இது புதுசு என்றாலும் கூட தமிழக மக்களை எந்த விதத்திலும் கனெக்ட் பண்ண முடியாத தூரத்தில் இருக்கிறது கங்குவா. குறிப்பாக படத்திற்கான பலமே என்பது ஒரு வலுவான வில்லன் தான், அந்த வகையில் ஆரம்பத்தில் பாபு தீவள் வந்ததை பார்த்து வில்லன் வேற லெவலில் மிரட்ட போகிறார் என்று எதிர்பார்த்தால், மொக்க வில்லனாக இருக்கிறார்.
ஒருவேளை பாபு தீவினுக்கு அதிக சீன் வைத்தால் சூர்யா டம்மி ஆகி விடுவார், குறிப்பாக சூர்யாவை விட வில்லன் ஸ்கோர் செய்து விடுவார் என்பதற்காக கூட வில்லன் காட்சிகள் குறைக்கப்பட்டிருக்கலாம். மொத்தத்தில் இந்த படத்தில் எமோஷனல் என்று கேட்டால் எந்த விதத்திலும் எந்த ஒரு கேரக்டரிலும் படம் பார்க்கிறவர்களுக்கு எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை.
ஆனால் படத்தை எமோஷனலாக கனெக்ட் பண்ண பல வகையில் இயக்குனர் முயற்சித்தும் அது எடுபடவில்லை, மொத்தத்தில் இந்த படத்திற்கு இவ்வளவு பில்டப் தேவைதானா என்று படம் பார்க்கின்றவர்கள் வேதனையுடன் தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.