அதற்குள் இத்தனை கோடியா.? பொன்னியின் செல்வன், விக்ரமை பின்னுக்கு தள்ளும் ஜெயிலர்..

0
Follow on Google News

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கியகத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி திரைத்துறை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் மல்ட்டி ஸ்டார்கள் இடம்பெற்று பேன் இந்தியா படமாக உருவாகியுள்ளது.

கடுமையான எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியாகி இந்த திரைப்படம் வெற்றிகரமாக தற்போது திரையரங்குகளில் வசூலை குவித்து வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் ஈர்த்துள்ளது. பாடல் வெளியாகிய நாள் முதலே இதற்கு நெட்டிசன்கள் பலரும் ரில்ஸ் வீடியோ செய்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகின்றனர்.

ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியுள்ள இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தர்பார், அண்ணாத்த படங்கள் எல்லாம் 200 கோடி வசூலுக்கு போராடி பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவிய நிலையில், இந்த படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி ஆவது மாஸ் காட்ட வேண்டும் என்று ஒரு பக்கம் இருந்தார்.

மற்றொரு பக்கம் பீஸ்ட் தோல்வியால் பல ட்ரோல்களை அனுபவித்த நெல்சன் இந்த படம் நன்றாக இல்லாவிட்டால் கெரியரே காலி என்ற நிலையில் இருந்தார். இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய கம்பேக்காக அமைந்ததுதான் ஜெய்லர் படம். இந்நிலையில் வெளியான ஐந்தே நாட்களில் ஜெய்லர் படமானது 400 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இரண்டுமே 300 கோடி வசூலை பெற்ற நிலையில், முதல் வாரத்திலேயே அந்த இரு படங்களின் வாழ்நாள் வசூலையும் ஜெயிலர் திரைப்படம் முறியடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மொத்த வசூல் 420 கோடி ரூபாயாக உள்ள நிலையில், அந்த படத்தின் வசூலை ஜெயிலர் முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் 500 கோடி வசூலையும் அடுத்த வார இறுதிக்குள் ஜெயிலர் பீட் செய்து விட்டு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேகத்தில் சென்றால், ஷாருக்கானின் பதான் செய்த 1000 கோடி வசூல் சாதனையையும் முறியடித்து விடலாம் என்று திரைத்துறையினர் கூறி வருகின்றனர். இதிலும் ஜெயிலர் படம் முதல் வார இறுதியை மட்டுமே நிறைவு செய்துள்ள நிலையில்,

இரண்டாவது வார இறுதியின் முடிவில் இன்னமும் பெரிய வசூல் வேட்டை நடக்கும் என்றும் அதிகபட்சமாக 500 கோடி முதல் 600 கோடி வரை தியேட்டர் வசூல் இருக்கும் என்றும் அதை தாண்டி ஜெயிலர் படத்தின் இசை உரிமம், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் என ஒட்டுமொத்தமாக 1000 கோடி வரை வியாபாரம் செய்யும் இந்த படம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தியேட்டர் அதிபர்கள், சன் பிக்சர்ஸ், ஜெயிலர் படக்குழுவினர் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்து ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக நெல்சன் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளது. அதுபோல் நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கவும் திட்டம் உள்ளது” என்றார்.