ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர், இந்த படத்தில் மலையாள முன்னனி நடிகர் மோகன்லாலுக்கும், கர்நாடக முன்னனி நடிகர் சிவராஜ்குமாருக்கும் கதை தொடர்பாக எந்தவித கனெக்ஷனும் இல்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் இவர்களின் காட்சிகள் வெறும் கேமியோ ரோல் போல் தான் அமைத்துள்ளது.
ஆனால் மோகன் லால் மற்றும் சிவராஜ்குமார் இருவருக்கு கொடுத்த பில்டப்புகள் எதுவம் ஜெயிலர் படத்தில் படத்தில் பெரிதாக வொர்க் அவுட்டும் ஆகவில்லை, இது குறித்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் கூட, பட குழுவினர் மீது குற்றம் சொல்ல கூடாது, ஏனென்றால் ஜெயிலர் படத்தின் ஆரம்பகட்ட ப்ரோமோவில் மோகன்லால், மற்றும் சிவராஜ் குறித்து பட குழு எதுவுமே வாய் திறக்கவில்லை.
ஆனால் ஜெயிலர் படத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் முக்கிய வேடத்தில் கலக்க இருப்பதாக கன்னட மற்றும் கேரள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக ரசிகர்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பில் படம் பார்க்க போனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அந்த வகையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மிக பெரிய வியாபாரம் தந்திரன் தெரிந்தவர் என்பது பலரும் அறிந்த ஓன்று தான்.
ஜெயிலர் படம் கேரளா மற்றும் கர்நாடகா வசூலைக் குறிவைத்து இந்த படத்தில் மோகன்லால், மற்றும் சிவகுமார் இருவரையும் வியாபார நோக்கில் ஜெயிலர் படத்தின் உள்ளே கொண்டு வந்து அவர் வகுத்த திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக கேரளாவை விட கர்நாடகாவில் ஜெயிலர் வசூல் சக்கை போடு போட்டு வருகிறது.
இருந்தாலும் மோகன்லாலுக்கு கேரளாவிலும் சிவராஜ்குமாருக்கு கர்நாடகாவிலும் பெரிய ஃபேன் பேஸ் இருக்கும் நிலையில், முக்கியத்துவம் இல்லாத சில நிமிடங்கள் மட்டுமே இடம் பெரும் வகையில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்தால் அவர்களுடைய ரசிங்கர்கள் மிக பெரிய ஏமாற்றம் அடைவார்கள், என்பதை புரிந்து கொள்ளாமல் இவர்கள் ஜெயிலர் படத்தில் கமிட்டாகி இருக்க மாட்டார்கள்.
தங்கள் கேரக்டரின் தன்மை தெரிந்தும் பணத்திற்காகவோ அல்லது ரஜினி மீது கொண்ட அபிமானத்திற்காகவோ தங்கள் க்ரெடிபிலிட்டியை இந்தப் படத்திற்காக அடகு வைத்திருக்கிறார்கள் மோகன்லால் மற்றும் சிவகுமார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் ஜெயிலர் பட ப்ரோமோவில் ‘மோகன்லால் ஆன்போர்ட்’, ‘சிவராஜ்குமார் ஆன்போர்ட், சுனில் ஆன்போர்ட், ஜாக்கி செராப் ஆன்போர்ட்’ என்றெல்லாம் செய்தி வந்தபோது ‘நெல்சன் பெரிய கைதான்.. இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்டிங்க வச்சு ஒரு கதை பண்ணுற அளவுக்கு ஸ்டஃப் இருக்கு’ என்றே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிரிபார்ப்பு ஜெயிலர் படத்தின் மீது இருந்து வந்தது.
ஆனால் படம் பார்த்தபிறகு தான் ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது நெல்சன் இப்படி மல்டி ஸ்டார் வெச்சு படம் எடுக்கும் அளவுக்கு ஒர்த் இல்லை, சும்மா வெறும் பில்டப் தான், படத்தின் கேரளா,கன்னட வசூலுக்காக மோகன் லால், சிவராஜ் குமார் இருவரும் சும்மா ஊறுகாய் மாதிரி இந்த படத்தில் பயன்படுத்த பட்டுள்ளார்கள், இருந்தாலும் இது மல்டி ஸ்டார் படம் என எதிர்பார்ப்பில் சென்ற அனைவருக்கும் ஏமாற்றம் மிஞ்சியுள்ளது.