டப்பிங் படத்துக்கு இவ்ளோ வியாபாரமா? ஆர் ஆர் ஆர் படம் சாதனை!

0
Follow on Google News

ஆர் ஆர் ஆர் படத்தின் தமிழக விநியோக உரிமையை லைகா நிறுவனம் 43 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ராஜமௌலி பாகுபலி இரண்டாம் பாகத்துக்குப் பிறகு இயக்கியுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில் இப்போது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. பாகுபலியின் வெற்றியால் ராஜமௌலியின் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் தமிழக விநியோக உரிமையை லைகா நிறுவனம் 43 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். தமிழக உச்ச நடிகர்கள் ஒருவர் இல்லாத படத்துக்கு இவ்வளவு தொகைக்கு விலை போயிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.