அஜித் ரசிகர்களுக்கு குஷியான செய்தி… வருகிறது செகண்ட் சிங்கிள்!

0
Follow on Google News

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் இரண்டாம் பாடல் இந்த வாரம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித், கார்த்திகேயா மற்றும் ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பின்னர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளதாக முன்னதாகவே அறிவித்துவிட்டனர்.

ஆனால் என்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்ற விவரம் இப்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜனவரி 12 ஆம் தேதி புதன் கிழமையில் வெளியாக அதிகவாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வெளியானால் முதல் இரண்டு நாட்கள் ரசிகர்கள் பார்த்து மகிழ, பொங்கலுக்கு பிறகு பொதுவான ரசிகர்கள் பார்க்க ஏதுவாக இருக்கும் என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த ரிலீஸ் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வேற மாரி பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் அடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடல் இந்த வாரம் வியாழக்கிழமை வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இந்த பாடல் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல் என்று சொல்லப்படுகிறது. உருக்கமான இந்த பாடலை தாமரை எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.