ஆர் ஆர் ஆர் படத்தின் டிரைலர் இணையத்தில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. ராஜமௌலி பாகுபலி இரண்டு பாகங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில் இப்போது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. பாகுபலியின் வெற்றியால் ராஜமௌலியின் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் இந்த படத்தின் அனைத்து மொழி டிரைலர் ரிலீஸ் டிசம்பர் 3 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது எதிர்பாராத சூழல் காரணமாக தள்ளிப்போன டிரைலர் வெளியீடு இன்று நடந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள டிரைலர் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.