யுட்யூபில் வீடியோவை போட்டே ஃபேமஸான நபர்களில் டிடிஎஃப் வாசனும் ஒருவர் ஆவார். வெறும் யுட்யூபில் பைக் ஓட்டும் வீடியோவை போட்டே அவர் 2கே கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நபராக மாறிவிட்டார். இந்த ஃபேன் பேஸை தக்க வைத்துக் கொள்ள அவர் அவ்வப்போது சில அக்கப்போரில் ஈடுபடுவது உண்டு. குறிப்பாக, அவர் பைக் ஸ்டண்ட் செய்வதற்கே ஃபேமஸானவராக இருக்கின்றார்.
பைக் ஸ்டண்ட் மற்றும் சாகசம் செய்வது என்பது தவறில்லை. ஆனால், அதை பொதுவெளியில், குறிப்பாக மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செய்வது என்பது தண்டனைக்கு உரிய செயலாக இருக்கின்றது. இதைதான் சற்றும் தயங்காமல் செய்து வருகின்றார், டிடிஎஃப் வாசன். கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது.
அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு டி.டி.எஃப்.வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “சாலையில் மிதமான வேகத்தில் வந்துகொண்டிருந்தபோது, கால்நடைகள் சாலையை கடந்தன. இதனால் திடீரென பிரேக் போட்டதால், வாகனத்தின் சக்கரம் தூக்கியது. பிரேக் போடாமல் இருந்தால் கால்நடைகள் மற்றும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்” எனக் டி.டி.எஃப்.வாசன் தரப்பில்கூறப்பட்டிருந்தது.
மேலும், “விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை. புண்கள் மோசமாகி வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. ஆகவே ஜாமீன் வழங்க வேண்டும்” என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தான் அப்பாவி என்றும், எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார் வாசன்.
இதையடுத்து இந்த மனுவை பார்த்த நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் மனுதாரர் இதுபோன்ற சாகசங்களை செய்து வருகின்றார். இதைப்பார்த்து பல இளைஞர்கள் அவர்களது பெற்றோர்களிடம்விலை உயர்ந்த பைக்கை வாங்கி தருமாறு கேட்டு வருகின்றனர். அந்த பைக்கை வாங்கிக்கொண்டு இவரைப்போலவே சாகசத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இதனால் பல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இளைஞர்களை இதுபோன்ற விஷயத்திற்கு தூண்டும் வகையில் TTF வாசனின் செயல் இருந்து வருகின்றது. எனவே வாசனுக்கு வழங்கப்படும் தீர்ப்பு மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதால் வாசன் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே இருக்கவேண்டும். எனவே அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார் நீதிபதி.
அப்போது, வலதுகையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வருவதால், டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இளைஞர்களைத் தூண்டும் வகையில் செயல்பட்ட மனுதாரர், தனது youtube தளத்தை மூடிவிட்டு, பைக்கை எரித்துவிட்டு வரும்படி கருத்து தெரிவித்தார். மேலும் தன்னுடைய ஜாமின் மனுவில் டி.டி.எஃப்.வாசன் தான் ஒரு அப்பாவி என கதறும் வகையில் தெரிவித்திருந்தது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.