பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உட்பட சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் மீடியேட்டர் இவர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடந்து வரும் வருமான வரி சோதனையில் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் ஆட்டம் கண்டுள்ளது. மேலும் வருமான வரி சோதனைக்கு பின்பு அன்புச் செழியன் எடுத்துள்ள அதிரடி முடிவினால், ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையினரும் கதி கலங்கி நிற்கின்றனர்.
தற்பொழுது நடைபெற்றுள்ள வருமான வரித்துறை சோதனையில் சுமார் 250 கோடி வரை ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருமான வரி சோதனைக்கு பின்பு இனி கருப்பு பணத்தை சினிமாவில் முதலீடு செய்வதில்லை என தயாரிப்பாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். அனைத்தும் வெள்ளை பணமாக வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்து. சரியான கணக்கை தங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்கின்ற திட்டத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.
அதே நேரத்தில் தயாரிப்பாளர்களிடம் நடத்திய வருமானவரித்துறை சோதனையில், தயாரிப்பாளர்களை நிலமைகளை பார்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் பரிதாபப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் பெரும்பாலானோர் கடன் சுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான கருப்பு பணங்கள் புலங்குவது தியேட்டரின் உரிமையாளர்களிடம் தான் என்று வருமானவரித்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய அன்புச்செழியன் தற்பொழுது மீண்டும் சிக்கி உள்ளார். தொடர்ந்து அன்புசெழியனை வருமான வரித்துறையினர் குறி வைத்து வருகின்றனர். வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணிப்பது இரண்டு நபர்களை, ஒன்று அரசியலில் இருப்பவர்கள் மற்றொன்று சினிமா துறையில் இருப்பவர்கள்.
தன்னை தீவிரமாக வருமான வரித்துறையினர் கண்காணித்து வருவதை உணர்ந்த அன்புசெழியன், மேலும் ரிஸ்க் எடுத்து சினிமாவில் முதலீடு செய்ய வேண்டுமா.? என்கிற முடிவுக்கு வந்துள்ளார் அன்புசெழியன். இதற்கு மேல் இனி சினிமாவில் முதலீடு செய்து வருமான வரித்துறை கெடுபுடியில் தொழில் செய்ய முடியாது என்கின்ற முடிவு செய்து, வேறு ஒரு தொழிலில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அன்புச் செழியனை நம்பி இதுவரை படம் எடுத்து வந்தவர்கள் அடுத்து படம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் முன்னனி நடிகர்கள் படங்கள் கூட பாதியிலே நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஒட்டு மொத்த சினிமாவும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.