பிரபல சினிமா பைனான்சியர் மதுரையை சேர்ந்த அன்புசெழியன். தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களுக்கு சினிமா பைனாசியர் இவர் தான். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்வதற்கான ஆதாரமும் கண்டெடுக்கப்பட்டது, அன்புச் செழியன் பைனான்ஸ் செய்த சுமார் 20 தயாரிப்பாளர்கள் பட்டியலும் வருமான வரித்துறையினர் கையில் சிக்கியது. நடிகர் தனுஷ் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சில படங்கள் தயாரித்து மிக பெரிய நஷ்டத்தை சந்தித்தார், அப்போது மீண்டும் அவர் படம் எடுக்க சினிமா பைனாசியர் அன்புசெழியனிடன் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வருமான வரித்துறை கையில் சிக்கிய 20 தயாரிப்பாளர் பெயர்களில் தனுஷ் பெயரும் இடம்பெற்று இருந்ததாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து அன்புசெழியனிடம் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்த தயாரிப்பாளர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அன்புச் செழியனிடம் இருந்து இவர்கள் வாங்கிய பணத்திற்கும் மற்றும் திரும்பக் கொடுத்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
இதனால் எந்த மாதிரியாக நீங்கள் அன்புச் செழியனிடம் பணம் வாங்கினீர்கள், அதை எப்படி திருப்பி கொடுத்தீர்கள் என்று விளக்கம் தர வேண்டும். இதற்கு வருமானவரித்துறை தரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருமானவரித்துறைக்கு முறையான தகவல்களை தெரிவிக்காததை தொடர்ந்து இன்று மீண்டும் வருமானவரித்துறை அதிரடியாக களத்தில் இறங்கி சில முக்கிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்கள் தவிர்த்து தயாரிப்பாளர் தானு, எஸ் ஆர் பிரபு, லஷ்மண குமார் ஆகியோர்க்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் வருமான வரித்துறை அதிகாரிகளின் வலையில் தயாரிப்பாளர் லட்சுமண குமார் என்பவரும் சிக்கி உள்ளார். இவர் நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்திக் ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் என கூறப்படுகிறது.
இவர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2, கார்த்திக் நடிப்பில் வெளியான தேவ், சர்தார் போன்ற படங்களை தயாரித்தவர். இதனால் தயாரிப்பாளர் லட்சன் லட்சுமண குமாரிடம் நடத்தும் அதிரடி சோதனையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் வருமானவரித்துறை வலையில் சிக்குவார்கள் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் இன்று தயாரிப்பாளர் வீட்டில் நடைபெற்று வரும் அதிரடி சோதனையில் சிக்கும் முக்கிய ஆவணங்களை வைத்து, விரைவில் வருமான வரித்துறை வலையில் சிக்கியுள்ள முன்னனி நடிகர்கள் பலர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது, மேலும் இவர்கள் முறையான விளக்கம் கொடுக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.