சிவகார்த்திகேயன் படம் என்றாலே, காமெடியும் காதலுமாய் கலகலவென இருக்கும் என்பதாலேயே பேமிலி ஆடியன்ஸ் விரும்பிப் பார்ப்பார்கள். குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ போன்ற படங்கள் மூலம் குழந்தைகளின் மனதில் இடம்பிடித்தார். அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், சம்பாதித்த பணத்தை வைத்து SKProduction என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்தாலும், வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர். லோக்கல், பிரின்ஸ் போன்ற படங்கள் வரிசையாக எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் போனது. இதனால் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் வெற்றியை பெற்று தந்தது.
இதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் உற்சாகத்துடன் நடிக்கத் துவங்கியுள்ளார். ஏற்கனவே, இவர் நடித்துள்ள அயலான் படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏலியன் தொடர்பான கதை என்பதால், ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. எனவே, சிவகார்த்திகேயனும் அயலான் படத்தின் ரிலீசுக்காக எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், தற்போது கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இப்படி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணித்து வரும் சிவகார்த்திகேயன், இப்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அண்மையில், இசையமைப்பாளர் இமான் அளித்த பேட்டி, சிவகார்த்திகேயனின் இமேஜை நாசம் செய்து கொண்டிருக்கிறது. மேலும், இணையவாசிகள் பலரும் சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து ஏகப்பட்ட மீம்ஸ்களையும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், இமான்-சிவகார்த்திகேயன் இடையேயான சர்ச்சையினால் சிவகார்த்திகேயனின்அடுத்தடுத்த படங்களின் வெற்றி பாதிக்கப்படும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் இந்த சர்ச்சைகளை கண்டுகொள்ளாமல் கமல் தாயரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படபிடிப்புகள் தற்போது காஷ்மீரில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. காஷ்மீரில் 60 நாட்களில் முடிக்கவேண்டிய இப்படத்தின் படபிடிப்பினை 90 நாட்கள் வரை கொண்டு சென்றுள்ளனராம். அதனால் படத்தின் பட்ஜெட் எகிறியுள்ளதாம். இதனால் தயாரிப்பு நிறுவனம் அப்செட்டில் உள்ளதாம்.
மேலும், சீக்கிரமாக காஷ்மீரில் ஷூட்டிங்கை முடித்து விட்டு சென்னைக்கு திரும்புமாறும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாம். அதுமட்டுமில்லாமல், சென்னையில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகையையே பட்ஜெட்டாக நிர்ணயித்துள்ளதாகவும், அதனை மீறி செலவு செய்யகூடாது எனவும் படக்குழுவினரரிடம் கறாராக கூறியிருக்கார்களாம்.
ஏற்கனவே, சிவகார்த்திகேயனைச் சுற்றி வலம்வரும் சர்ச்சையினால் படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருக்கிற நிலையில், இப்போது ஷூட்டிங் முடிப்பதற்குள் சிவகார்த்திகேயனால் எக்கச்சக்க செலவுகளை அதிகரித்திருப்பதால், கமல்ஹாசன் மோசம் போய்விடுவாரோ என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.