தேனி மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் பிறந்த இளையராஜா, தன்னுடைய இளம் வயதில் கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய இசை பயணத்தை தொடங்கியவர். தமிழ் சினிமாவில் அன்னக்கிளி என்கின்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலே அவருடைய இசையில் இடம் பெற்ற மச்சான பாத்தீங்களா என்கின்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒளித்து அவருக்கான அங்கீகாரத்தை பெற்று தந்தது.
அதன் பின்பு சுமார் 70, 80, 90களில் அவருடைய இசை அமைப்பில் வெளியாகும் படத்தில் இசை அமைப்பாளர் இளையராஜா என்கின்ற டைட்டில்காகவே பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏ ஆர் ரகுமான் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் வரை அசைக்க முடியாத இடத்தில் இருந்த வந்த இளையராஜா, 90களுக்கு பின்பு ஏ ஆர் ரகுமான் வருகைக்குப் பின்பு தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்கு போட்டியாக உருவானார் ஏ ஆர் ரகுமான். இருந்தும் காலங்கள் கடந்தும் இன்றைய காலகட்டத்தில் கூட இளையராஜாவின் இசை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இளையராஜா சினிமாவில் சம்பாதிப்பதை விட இசை கச்சேரிகளில் அதிகம் சம்பாதிக்க தொடங்கிய பின்பு தொடர்ந்து உலகம் முழுவதும் கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி இசை ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். இந்நிலையில் நவம்பர் 25ஆம் தேதி இளையராஜாவின் இசை கச்சேரி துபாயில் நடக்க இருந்தது. இதற்கான ஒப்பந்தம் ரமேஷ் என்கின்ற தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் செய்த இளையராஜா அதற்கான அட்வான்ஸ் தொகையும் பெற்று கொண்டார்.
நவம்பர் 25ம் தேதி இசைஞானி இளையராஜாவின் கச்சேரி துபாயில் நடக்க இருந்த நிலையில், டிக்கெட் விற்பனை மிக குறைவாக விற்கப்பட்டது. இது நிகழ்ச்சியின் ஒப்பந்தக்காரர்க்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் துபாய் இசை கச்சேரியை நடத்தினால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்த நிகழ்ச்சியை ஒப்பந்தம் செய்தவர்கள் தரப்பில் இருந்து ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இளையராஜா வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகிறது. இசைஞானி இளையராஜாவின் கச்சேரி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் நவம்பர் 19ஆம் தேதி துபாயில் ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி நடந்துள்ளது. இந்த கச்சேரியில் உலகில் இசை துறையில் சிறந்து விளங்கும் 50 பெண்கள் இசை கருவிகளை வாசித்த ஒரு நிகழ்வு நடைபெற்றது.
இது ரசிகர்களை மிக பெரிய அளவில் மகிழ்ச்சியடைய செய்துள்ளது, மேலும் பொதுவாக இசை கச்சேரி நிகழ்ச்சிக்கு விற்கப்படும் டிக்கெட் விலையை விட அதிகமான விலைக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருந்தாலும் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டது. இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. இந்நிலையில் இசைஞானி இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்கப்படாமல் இருந்தது குறித்து விசாரித்ததில்,
கடந்த வாரம் தான் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது, ஒரு குறுகிய காலத்தில் மேலும் ஒரு நிகழ்ச்சி நடப்பது துபாய் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.ஒரு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பே இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்று இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்று துபாய் தமிழர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.