விஜயை நம்பி சென்றால் நடுதெரு தான்… சாந்தனுவை பார்த்தாவது பிரசாந்த் சுதாரிச்சுக்க வேண்டாமா.?

0
Follow on Google News

பொதுவாக சினிமா துறையில் ஒரு நடிகர் தொடர்ந்து ஹீரோவாக முயற்சித்து அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திக்கும்போது அந்த காலகட்டத்தில் எந்த நடிகர் உச்சத்தில் இருக்கிறாரோ அவருடன் இணைந்து அவருக்கு சமமான கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நடிகருக்கு அது கம் பேக் படமாக அமைந்து அடுத்தடுத்து அந்த நடிகரின் சினிமா வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அந்த வகையில் நடிகர் அருண் விஜய் பல வருடங்களாக தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு தொடர்ந்து ஹீரோவாக நடித்த அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்த அவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் அஜித் ரசிகர்களும் அருண் விஜயை கொண்டாட தொடங்கினார்கள், இதனை தொடர்ந்து, என்னை அறிந்தால் படத்தில் கிடைத்த தனக்கான அங்கீகாரத்தை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து தொடர்ந்து சரியான கதையை தேர்வு செய்து சினிமாவில் வெற்றி அடைந்து வருகிறார் அருண் விஜய்.

அதே நேரத்தில், அருன் விஜய் என்னை அறிந்தால் படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதற்கும், அவர் மக்கள் மத்தியில் செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகர் அஜித்தின் பெருந்தன்மை தான் என்பதை மறுக்க முடியாது, காரணம் ஒரு நடிகர் தன்னுடைய படத்தில் தன்னை ஓவர் டேக்ஸ் செய்யும் வகையில் நடித்து விடக்கூடாது தன்னுடைய கதாபாத்திரத்தை விட அந்த நடிகரின் கதாபாத்திரம் பெருமளவு பேசி விடக்கூடாது என பல உச்ச நடிகர்கள் மிக கவனமாகவே இருப்பார்கள்.

அந்த விதத்தில் சக நடிகர்கள் ஓவர் டேக் செய்யும் வகையில் நடித்தால் அந்த நடிகர்களின் காட்சிகள் பெருமளவு நீக்குவதற்கு அந்த படத்தின் ஹீரோ தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதற்கும் வாய்ப்பு வருகிறது, அந்த வகையில் நடிகர் அஜித்தின் பெருந்தன்மை தான் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜயின் காட்சிகள் மிக பெருமளவில் பேசப்பட்டு அவருக்கு சினிமாவில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது.

இந்த நிலையில் ஒரு காலத்தில் நடிகர் அஜித் விஜய்க்கு இணையான நடிகராக இருந்த டாப் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரசாத் பிரசாந்த், தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சினிமா துறையைச் சார்ந்த பலரும் நடிகர் பிரசாந்துக்கு சில அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.

அதாவது நடிகர் விஜய் படத்தில் நடிப்பதற்கு முன்பே இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் பிரசாந்த் பல கேள்விகளை கேட்டு தெளிவு பெற்ற பின்பு தான் நடிக்க வேண்டும், தன்னுடைய காட்சிகள் எவ்வளவு நேரம் அந்த படத்தில் இடம்பெறும், தான் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடித்த பின்பு எடிட் செய்து தூக்கி விட கூடாது என பல கேள்விகளை கேட்டு, விஜய் உடன் நடிக்கும் படம் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் நடித்த விக்டர் கதாபாத்திரம் போன்று பேசப்படும் வகையில் இருந்தால் நிச்சயம் பிரசாத்துக்கு இந்த படம் கம் பேக் படமாக இருக்கும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

அதே நேரத்தில் இதற்கு முன்பு விஜய்யை நம்பி நடிகர் சாந்தனு ஏமார்ந்தது போன்று பிரசாந்து ஏமார்ந்து விட கூடாது எனவும் சினிமா வட்டாரத்தில் எச்சரிக்கை குரலும் ஒலிக்க தொடங்கியுள்ளது. காரணம் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கமிட்டான நடிகர் சாந்தனு, தனக்கு மாஸ்டர் படம் மிக பெரிய கம் பேக் படமாக இருக்கும் என எதிர்பார்த்து அந்த படத்தில் நடித்து வந்துள்ளார்.

ஆனால் படம் வெளியான பின்பு தான் அவருக்கே மிக பெரிய ஷாக் கொடுப்பது போன்று, சாந்தனு நடித்த பெரும் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதை அவரே பேட்டியில் சொல்லி வருத்தப்பட்ட சம்பவமும் அரங்கேறியது, அந்த வகையில் விஜய் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ள பிரசாத்துக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித் உடன் நடித்த அருண் விஜய்க்கு அமைத்தது போன்று கம் பேக் படம் போன்று அமையுமா, அல்லது மாஸ்டர் படத்தில் விஜய் உடன் நடித்த சாந்தனுக்கு போன்று அமையுமா என்பது படம் வெளியான பின்பு தான் தெரியவரும்.