நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாகும் என படம் வெளியாவதற்கு முன்பே அந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்தார். இதனை தொடர்ந்து அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய உடனே உலகம் முழுவதும் சுமார் 15 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை ஜோராக நடந்தது.
கர்நாடகா மாநிலத்தில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது. மேலும் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகள் இல்லை என்பதால் விஜய் ரசிகர்கள் பலரும் அண்டை மாநிலமான கேரளா கர்நாடகா ஆந்திரா ஆகிய இடங்களில் கோட் திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு படை எடுக்க தொடங்கினர்.
கோட் திரைப்படத்தை இந்தியில் வட மாநிலங்களில் திரையரங்கு உரிமையை ஜி சினிமா பெற்றுள்ளது இதனை தொடர்ந்து ஜீ சினிமா கோட் திரைப்படத்தை வட மாநிலங்களில் உள்ள மெட்ரோ சிட்டியில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை எதிர்பார்ப்பையும் தூண்டும் வகையில் இந்த விளம்பரம் அமைந்தது.
இந்தியாவைத் தாண்டி ஐரோப்பிய நாடுகளிலும் கோட் திரைப்படத்தின் டிக்கெட் மிக ஜோராக விற்பனை செய்து ஹவுஸ்புல் என போடும் வைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இந்த படம் ஐபிஎல் மேட்ச் தொடர்பான கதை என்பதால் இந்த படத்தில் எம் எஸ் டோனி சிறப்பு காட்சியில் வருகிறார் என்றெல்லாம் உறுதி படாத தகவல் வெளியாய் இருந்தது. அந்த வகையில் எம் எஸ் டோனி இந்த படத்தில் அப்படி எந்த ஒரு காட்சிகளிலும் நடிக்கவில்லை என்பது உறுதியாகிறது.
மேலும் சிவகார்த்திகேயன் இதில் சிறு காட்சிகள் நடிகரார் திரிஷா நடிக்கிறார் என்றெல்லாம் தகவல் வெளியானது, ஆனால் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கவில்லை மேலும் விஜயகாந்த் வரும் காட்சி பார்ப்பதற்கு தமிழக மக்களே ஆர்வமாக இருக்கிறார்கள், காரணம் கேப்டன் பிரபாகரன் படத்தில் தோன்றிய
அதே போன்ற தோற்றத்துடன் ஏஐ டெக்னாலஜி மூலம் சில நிமிடங்கள் இந்த கோட் திரைப்படத்தில் தோன்றும் விஜயின் காட்சி பிரமிக்கும் வகையில் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கோட் திரைப்படம் இதற்கு முன்பு எந்த தமிழ் சினிமாவிற்கும் இல்லாத மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கோட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நிர்ணயித்த 1000 கோடி வசூலை நிச்சயம் தட்டி தூக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது. மேலும் படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி இந்த படத்தில் எதெல்லாம் சரியில்லை என்று டிரைலரை பார்த்து கருத்து தெரிவிக்கிறார்களோ அதெல்லாம் இந்த படத்தின் மிகப்பெரிய பாசிடிவ் ஆக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் பாடல்கள் சரியாக இல்லை என்கின்ற ஒரு அதிருப்தி விஜய் ரசிகர்கள் மத்தியிலேயே இருந்து வந்தது, அந்த வகையில் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக் சரி இல்லை என்கின்ற ஒரு விமர்சனம் கடுமையாக யுவன் சங்கர் ராஜாவை நோக்கி இருந்தது. அந்த வகையில் இசை ஏமாற்றி விட்டாலும் கோட் திரைப்படம் நிச்சயம் அதையெல்லாம் பூர்த்தி செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தும் இசையில் மங்காத்தா அளவுக்கு கோட் திரைப்படம் இல்லை என்றாலும் கூட மொத்தமாக படத்தை பார்ப்பவர்கள் இது மங்காத்தாவை விட பல மடங்கு தூக்கி சாப்பிட்டு விட்டது என்கின்ற ஒரு திருப்தியில் தான் திரையரங்கை விட்டு வெளியேறுவார் என உறுதியாக நம்புகிறது கோட் திரைப்பட குழு.