ஸ்ரீவித்யா முதல் ஆண்ட்ரியா வரை கமல்ஹாசன் காதல் வலையில் விழுந்த பெண்கள்.! ஒவ்வொருவரும் பிரிவுக்கு காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் திரையுலகில் உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் புதுமுக நடிகர்களுக்கு நடிப்பில் அவர் ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறார், காதல் மன்னன், நடன இளவரசன், சகலகலா வல்லவன், கலைஞானி என அரை நுற்றாண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவை நடிப்பின் திறமையால் தன் வசப்படுத்தி கொண்ட நடிகர் கமல்ஹாசன் வாழ்க்கையில் கடந்து சென்ற பெண்களின் பட்டியலும் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது.

70களில் நடிகை ஸ்ரீவித்யா உடன் காதல் கிசு கிசுவில் சிக்கிய நடிகர் கமல்ஹாசனின் முதல் காதலி ஸ்ரீவித்யா தான் என கூறப்படுகிறது. 1978ம் ஆண்டு தனது 24 வயதில் நடிகை வாணி கணபதியை திருமணம் செய்து கொண்ட கமல்ஹாசன் அடுத்த பத்து ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார். இதன் பின்பு தன்னுடன் இந்தி படங்களில் நடித்த நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்ட கமல்ஹாசன் – சரிதா தம்பதியர்களுக்கு சுருதி ஹாசன், அக்சரா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

தன்னுடன் நடித்த நடிகை சிம்ரன் உடன் நெருக்கமாக கமல்ஹாசன் இருந்ததை தொடர்ந்து அவரிடம் இருந்து அவரது இரண்டாவது மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார், இந்நிலையில் நடிகை சிம்ரன் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்த கமல்ஹாசன் விரைவில் சிம்ரனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அப்போது செய்திகள் வெளிவந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நடிகை சிம்ரன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்பு விருமாண்டி படத்தில் தன்னுடன் ஜோடி சேர்ந்த நடிகை அபிராமி உடன் கிசு கிசுக்கப்பட்ட கமல்ஹாசன் அதன் பின்பு என்னாச்சு என்றே தெரியவில்லை நடிகை அபிராமி சினிமாவில் இருந்து காணாமல் போய் விட்டார், பின்பு நடிகை கௌதமி உடன் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார் நடிகர் கமல்ஹாசன், இவர்களுடன் நடிகை கௌதமி மகள், மற்றும் கமல்ஹாசன் இரண்டு மகள்களும் வசித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து விஸ்வரூபம் படத்தில் நடித்த நடிகை பூஜா குமார் உடன் நெருக்கமாக கமல்ஹாசன் இருப்பதை அறிந்த கௌதமி தன்னுடைய குழந்தை பாதுகாப்பு கருதி கமல்ஹாசனிடம் இருந்து பிரிந்து செல்வதாக தெரிவித்துவிட்டு பிரிந்து சென்றார், இதனை தொடர்ந்து பூஜாகுமார் உடன் வெளிநாடுகளில் உல்லாசமாக சுற்றி வந்தார் கமல்ஹாசன், ஆனால் தீடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் பூஜா குமார். விஸ்வரூபம் திரைப்படத்தின் போது நடிகை ஆண்ட்ரியா உடன் கமல்ஹாசன் காதல் கிசு கிசுவில் சிக்கியது குறிப்படத்தக்கது.