இந்த ஒரு சீனுக்காவே பார்க்க வேண்டிய படம் … ஹாட்ஸ் ஆப் ஐஸ்வர்யா ராஜேஷ்…

0
Follow on Google News

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள பார்ஹான படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணம் முடிந்த இஸ்லாமிய குடும்ப பெண்ணாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மாமனார் இஸ்லாமின் மத வழக்கங்களை மிக தீவிரமாக கடைபிடிக்கக் கூடியவர்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தனது குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாத ஒரு சூழல் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்படும்பொழுது தான் வேலைக்குப் போவதாக முடிவு எடுக்கிறார். ஆனால் அவருடைய குடும்பத்தில் ஐஸ்வர் ராஜேஷ் வேலை செய்வது விருப்பம் இல்லை என்றாலும் அதையும் மீறி ஐஸ்வர்யா ராஜேஷ் கால் சென்டருக்கு வேலைக்கு செல்கிறார்.

அங்கு கால் சென்டரில் வேலையை செய்து கொண்டிருக்கும் பொழுது அருகில் உள்ள மற்றொரு கம்பெனியில் தற்போது வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் வாங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் அதிகம் தருவதால் அங்கே வேலை செய்ய ஐஸ்வர்யா ராஜேஷ் முயற்சி செய்தபோது, சக ஊழியர்கள் அங்கே வேண்டாம் உன்னால் வேலை பார்க்க முடியாது என தெரிவிக்கிறார்கள்.

இருந்தும் அதையும் மீறி ஐஸ்வர் ராஜேஷ் புதிய கம்பெனியில் வேலை செய்கிறார் அங்கே வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் மிகப்பெரிய அதிர்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்டர்நெட்டில் செக்ஸ் சாட் தொடர்பான வேலை அது, ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் நாளே அதிர்ச்சி அடைந்தாலும் அங்கே சக ஊழியர்கள் இதற்கு தான் இந்த வேலை வேண்டாம் என தெரிவித்தோம் என தெரிவிக்கிறார்கள்.

இருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து அங்கே வேலை செய்து வருகிறார். அங்கே பணி புரியும் பொழுது அந்த கம்பெனி சில கண் கண்டிஷன் போடுகிறார்கள், அதாவது தொலைபேசியில் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு உங்களுடைய முழு விவரத்தை தெரிவிக்க கூடாது, இருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நபரிடம் தன்னை பற்றி முழு விவரத்தையும் தெரிவித்து விடுகிறார்.

இதன் பின்பு அந்த நபரால் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்படும் பிரச்சனை தான் இந்த படத்தின் கதையாக இருக்கிறது. படத்தின் கதை சற்று வித்தியாசமான கதையாகவே அமைந்துள்ளது. மேலும் குடும்ப சூழல் மற்றும் அவர் எதற்காக வேலைக்கு செல்கிறார் என்கின்ற காட்சிகள் அனைத்துமே அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு சர்ச்சை கூறிய நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் மிகப்பெரிய பிரச்சனைகள் சிக்குகிறார். அந்த பிரச்சனை வீட்டுக்கு தெரியாம நாமே சரி செய்து விடுவோம் என்பதற்கான முயற்சியும் மேற்கொள்கிறார். அந்த வகையில் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை வீட்டுக்குத் தெரியவும் கூடாது அதே நேரத்தில் இந்த பிரச்சனையை தாமே சந்திக்க வேண்டும் என்கின்ற கதை நகர்வுகளை சுவாரசியமாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.

என்னதான் நம்ம கலாச்சாரம் பண்பாடு என்று இருந்தாலும், இன்றைக்கு இருக்கு என்ற பொருளாதார சூழலில் பெண்களும் வேலை செய்தால் மட்டுமே நடுத்தர குடும்பத்தினர் வழிநடத்த முடியும் என்கின்ற ஒரு சூழல் உள்ளது. அப்படி வேலைக்கு செல்லும் பெண்கள் அங்கே பல விஷயங்களை சகித்துக் கொண்டுதான் செல்ல வேண்டியது இருக்கு, அப்படி சகித்துக் கொண்டு செல்லும் பொழுது சில பிரச்சனைகள் அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள் அதுதான் பாஹான படத்தின் கதை. அந்த வகையில் பல சர்ச்சையில் சிக்கியுள்ளார் பஹானா படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு எதிராக விமர்சனம் வந்தாலும், இந்த படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேசுக்கு பாராட்டும் குவிந்து வருவது குறிப்பிடதக்கது.