நடந்த சம்பவம் இது தான்…2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல்… இயக்குனர் அமீர் சொன்ன தகவல்…

0
Follow on Google News

கடந்த வாரம் டெல்லியில் போதை பொருள் கடத்தல் சோதனையில் சுமார் 2000 கோடி மதிப்புள்ள 1700 கிலோ போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது நாட்டையே உலுக்கியுள்ளது. குறிப்பாக இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் இயக்குனர் அமீர் இயக்கி நடிக்கும் இறைவன் மிக பெரியவன் படத்தில் நடிக்கும் மைதீன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த போதை பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டது, அமீர் இயக்கி நடிக்கும் இறைவன் மிக பெரியவன் படத்தின் இயக்குனர் ஜாபர் என்பதும் அவருக்கு வலது இடது கரமாக செயல்பட்டது மைதீன் மற்றும் சலீம் என்பதை கண்டு பிடித்துள்ளது போதை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார். அமீர் நடிக்க ரமேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாயவலை’ படம் முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார் தற்பொழுது போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ளார் ஜாபர் சாதிக்.

மேலும் அமீர் இயக்கி நடிக்கும் படம் ‘இறைவன் மிகப் பெரியவன் படத்தின் தயாரிப்பாளரும் ஜாபர் சாதிக் மற்றும் இவருக்கு போதை பொருள் கடத்தலில் வலதுகரமாக செயல்பட்ட ஜாபர் சாதிக் தம்பி மைதீன் இப்படத்தில் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதால் இந்த போதை பொருள் தடுப்பு சம்பத்தில் இயக்குனர் அமீர் மிக பெரிய சச்சைகளுக்கு உள்ளானார். மேலும் கடத்தல் கும்பலுடன் அமீருக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது என பல கேள்விகள் அமீரை நோக்கி எழுந்தது.

சினிமா துறையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் யாராவது ஒருவர் தயாரிப்பாளராக உருவெடுத்து திடீர் பிரபலம் அடைவார்கள், அப்படி தீடிரென பிரபலமாகும் தயாரிப்பாளர் பின்னணியில் ஒரு கூட்டம் சேர்ந்து கொண்டாடுவார்கள், ஆனால் இப்படி திடீர் பிரபலமானவர்கள் யாரும் இந்தளவிற்கு மிக பெரிய கடத்தலில் ஈடுபட்டவர்கள் கிடையாது அந்த வகையில் இது ஒட்டு மொத்த சினிமா துறையையே திக்குமுக்காட செய்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் அமீர், கடந்த இரண்டு நாட்களாக, எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.

நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத் துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழு விபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்” என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.