குப்பைகளை திமுக ஊக்குவிக்கலாம் ஆனால் முதல்வர் அதை செய்யலாமா.? சீரியல் நடிகையை வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி..

0
Follow on Google News

சமீபத்தில் யு டுயூப் பிரபலகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்தார், இதில் பிலிப் பிலிப் என்கிற யு டுயூப் சேனல் பிரபலத்தை முதல்வர் சந்தித்த புகைப்படம் வெளியானது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பிலிப் பிலிப் யு டுயூப்பில் முழுக்க முழுக்க ஆபாச பேச்சுக்கள் அடங்கிய வீடியோ தொடர்ந்து வெளியிடப்பட்டு அந்த யு டுயூப் சேனலை முடக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் மத்தியில் கண்டன குரல் எழுந்து வருவது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தற்போது முதல்வர் அந்த சர்சைக்குரிய ஆபாச யு டுயூப் சேனலில் வரும் நபரை சந்தித்த புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில், சம்பத்தப்பட்ட நபரின் ஆபாச வீடியோக்கள் பல சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு, இவரை தான் முதல்வர் சந்தித்து உள்ளார் என அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி இது குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் கூறுகையில்.

புதிய ஊடக அறிவாளிகளை முதல்வர் உருவாக்கும் முயற்சி இது தான அல்து தற்போது உள்ள புதிய தலைமுறையினரின் தீப்பொறி அறுமுகத்துக்கான ஆள் சேர்ப்பா.? என கேள்வி எழுப்பிய கஸ்தூரி, இவர்களில் பலர் யார் என்று உண்மையில் தெரியவில்லை, குப்பைகளை திமுக ஊக்குவிப்பது வேறு, ஆனால் தமிழக முதல்வர் அதை செய்வது வேறு என கஸ்தூரி பதிவுக்கு பதில் தரும் விதத்தில் சீரியல் நடிகை ஷர்மிளா கூறுகையில்.

கேள்வி கேட்பவர்கள்… உண்னமயை பேசுபவர்கள் …இவங்க பார்வையில் ரப்பிஷ்ஷாம்ல இவர்கள் அனைவரும் தங்கள் சேனல்கள் மூலம் CM relief fundsக்க்கு donateசெஞ்சிருக்காங்க.. நீங்க என்ன மேடம் செஞ்சிருக்கீங்கஇப்படி வெட்டியா பதிவு போடுவதை தவிர என ஷர்மிளா பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகை கஸ்தூரி தனது டிவீட்டர் பக்கத்தில், கெட்ட வார்த்தை உங்களுக்கு கேள்வி கேட்பதாய் தெரிகிறதா ?

ganrape joke சொல்வதுதான் உண்மை பேசுற லட்சணமா? நாளைக்கு தாவூத், பின் லாடன் நிதி குடுத்தாலும் வாங்கிட்டு போஸ் தருவாரா CM ? நிதி கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் வரவேற்போம் என்பது உங்களுக்கு சாதாரணமா என்னவோ. Not for me.என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.