நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் துணிவு. இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகி இருந்தார் நடிகர் அஜித்குமார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பாக இருந்தது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களில் இருந்த நிலையில் விக்னேஷ் சிவனின் கதை குப்பையாக இருந்த காரணத்தினால் அப்படத்தில் இருந்து அந்த விக்னேஷ் சிவனை அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் இருவரும் ஒருமனதாக வெளியேற்றிவிட்டு வேறு ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் சினிமா வட்டாரத்தில் மேலும் ஒரு செய்திகள் வெளியாகி உள்ளது. அதில் விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது பொய்யான தகவல் என்றும், அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படம் அது மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் என்பதால் விக்னேஷ் சிவனால் மேலும் அதிக நாட்கள் இந்த படத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அதனால் பரவாயில்லை நீங்கள் இன்னும் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள் அதற்குள் நான் ஒரு சிறிய படத்தில் நடித்துவிட்டு வந்துகிறேன் என்று அஜித் சொல்லிவிட்டு வேறு ஒரு இயக்குனர் படத்தில் நடிக்க சென்றுள்ளதாகவும், அதனால் அந்த படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் மிகப் பிரம்மாண்டமான பெரிய பட்ஜெட்டில் இயங்கக்கூடிய படத்தில் அஜித் நிச்சயம் நடிப்பார் என்கின்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டதால் தன்னுடைய இமேஜ் மிகப்பெரிய பாதிப்படையும் என்பதால் விக்னேஷ் சிவன் தன்னுடைய உதவியாளர்கள் மூலம் அஜித் படத்திலிருந்து தான் வெளியாகவில்லை, தன்னுடைய படத்தின் நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு சிறிய படத்தில் நடித்துவிட்டு வருகிறேன் என்று அஜித் சொன்னதாக ஒரு பொய்யான செய்தியை விக்னேஷ் சிவன் தரப்பு தான் பரப்பி வருவதாகவும், மேலும் விக்னேஷ் சிவனின் இது போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்கின்றனர் சினிமா துறையைச் சேர்ந்த சிலரும்