அஜித்துக்கு தேதி குறித்த விக்னேஷ் சிவன்… வா.. வா..மோதி பத்திடுவோம்… எதற்கும் துணிந்த நயன்தாரா.!

0
Follow on Google News

நடிகர் அஜித்தின் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துணிவு. பொதுவாக அஜித் ஒரு படத்தின் இறுதி கட்டப்பிடிப்பின் பொழுது தான் தன்னுடைய அடுத்த படத்தில் கமிட் ஆகுவார். ஆனால் துணிவு படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பின் பொழுதே தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் இவனுக்கு கொடுத்த அஜித், அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க கமிட் செய்யப்பட்டது.

இந்த படத்திற்காக நடிகர் நடிகைகள் தேர்வு, மற்றும் லொகேஷன் தேர்வு என அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், படத்திற்கான முழு ஸ்கிரிப்டும் எழுதும் பணியில் மிக தீவிரமாக எழுதி முடித்த விக்னேஷ் சிவன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருந்த நிலையில் சில குளறுபடி காரணமாக படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதமானது. இதனால் பிப்ரவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.

இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சந்தானம், யோகி பாபு உட்பட பல நடிகர்களிடம் கால் சீட்டும் உறுதி செய்து வைத்திருந்தார் விக்னேஷ் சிவன். படபிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு எனக்கு காதை பிடிக்கவில்லை என அஜித் தெரிவிக்க. கடும் அப்செட் ஆனார் விக்னேஷ் சிவன். இருந்தும் தயாரிப்பு நிறுவனத்தை கன்வின்ஸ் செய்ய விக்னேஷ் சிவன் முயற்சித்தும், அஜித்துக்கு கதை பிடிக்கவில்லை, நாங்க என்ன செய்வது என விக்னேஷ் சிவனுக்கு பதில் வேறு ஒரு இயக்குனர் மாற்றப்பட்டார்.

ஆனால் விக்னேஷ் சிவனிடம் படத்தின் முழு கதையையும் கேட்டு தான் இந்த படத்தில் அஜித் கமிட் ஆனார். இதன் பின்பு சுமார் 8 மாதம் விக்னேஷ் சிவன் படத்தின் முழு ஸ்கிரிப்ட் தயார் செய்து படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் அஜித் எனக்கு கதை பிடிக்கவில்லை என்று தெரிவித்தது, மிக பெரிய எதிர்பார்ப்பில் 8 மாதம் கடுமையாக வேலை செய்து வந்த விக்னேஷ் சிவனுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

மேலும் ஒரு படத்தில் கமிட் செய்யப்பட்டு பின்பு விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டது தமிழ் சினிமாவில் இது விக்னேஷ் இவனுக்கு ஏற்பட்ட அவமானமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் கதை கேட்டுவிட்டு தான் புதிய படத்தில் கமிட் ஆனார் அஜித், ஆனால் முழு ஸ்கிரிப்ட் பார்த்துவிட்டு எனக்கு கதை பிடிக்கவில்லை என்று அஜித் தெரிவித்துள்ளார். ஸ்கிரிப்ட்ல் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டுமென்றால் அதை நிச்சயம் விக்னேஷ் சிவனால் செய்திருக்க முடியும்.

அஜித் எந்த மாதிரியான எதிர்பார்க்கிறாரோ அதற்கேற்றார் போல் கதையில் மாற்றம் செய்து படப்பிடிப்பை தொடங்கி இருக்கலாம், ஆனால் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இல்லாத அஜித், ஒரே முடிவோடு எனக்கு கதை பிடிக்கவில்லை என்று திட்டமிட்டமாக தெரிவித்தது, விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக தான்.என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் படம் வெளியாகும் அதே தேதியில் தான் புதியதாக இயக்கப் போகும் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். அதே நேரத்தில் விக்னேஷ் சிவன் ஏற்பட்ட இந்த ஏமாற்றத்திற்கு சினிமா துறையைச் சார்ந்த பலரும் அவரை தொடர்பு கொண்டு நாங்கள் உன்னுடன் இருக்கிறோம் என ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லவ் டுடே படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோ பிரதீப் ரங்கநாதனிடம் ஒரு கதையை விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

அந்த கதை பிரதீப் ரங்கநாதனுக்கு மிகவும் பிடித்து விட்டது, இந்த நிலையில் படம் இறுதி செய்யப்பட்டு இருவரும் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வருகிறது. மேலும் இந்த படம் ஒரு பவர்ஃபுல்லான ஒரு படமாக எடுக்க திட்டமிட்டுள்ள விக்னேஷ் சிவன், அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படத்தின் அதே தேதியில் தன்னுடைய படத்தை வெளியிட்டு, என்னை நம்ப வைத்து ஏமாற்றிய அஜித்துக்கு தக்க பாடம் புகட்டுவேன் என்று சபதம் எடுத்துள்ளாராம் விக்னேஷ் சிவன். மேலும் எதையும் சந்திப்போம் என விக்னேஷ் சிவனுக்கு ஊக்கமும் உற்சாகமும் அவருடைய மனைவி நயன்தாரா கொடுத்து வருவதால் அஜித் படத்துடன் விக்னேஷ் சிவன் படம் மோதுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.