வெற்றிமாறன் இயக்கத்தில் சவுக்கு சங்கர் வாழ்கை வரலாறு… ஹீரோ யார்.. என்ன கதை தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முக்கிய நபர் ஒருவரை சந்தித்த பிறகு தான் பிரபல யூ டியூபர்க்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு ஆறு மாத கால சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சவுக்கு சங்கர் சமூக வலைதள பக்கத்தில் நீதிமன்றம் குறித்து அவதூறான பதிவுகளை உடனடியாக நீக்க தொழில்நுட்பத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றவர் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் ஊழல்களை சமரசம் இல்லாமல் பொதுவெளியில் விமர்சனம் செய்து வருகின்றவர் சவுக்கு சங்கர். திமுக ஆட்சிக்கு வருவதர்க்கு முன்பு அதிமுக மற்றும் பாஜக இரண்டு காட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில், சவுக்கு சங்கர் திமுக அனுதாபி என்கிற விமர்சனம் எழுந்தது.

ஆனால் திமுக ஆட்சி அமைத்ததும், சவுக்கு சங்கர் தற்பொழுது திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருவது, இவர் யாருடைய அனுதாபி என்கிற குழப்பம் பலருக்கு நீடித்து வருகிறது. சவுக்கு சங்கர் பாஜக மற்றும் பாஜக தலைவர்களை மிக கடுமையாகவும் , அநாகரிகமான முறையில் மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்வதில் இருந்து, இவர் பாஜக எதிர்ப்பாளர் என்பதில் உறுதியாக இருப்பது பல சமயங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்து.

இவருடைய விமர்சனத்தில் தமிழக காவல்துறையும் தப்பவில்லை,காவல்துறை வாகனங்கள், காவல்துறை அதிகாரிகளின் குடும்பதின் சொந்த வேலைகளுக்கு பயன்படுவதாக புகைப்படத்துடன் சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் பதிவு செய்த பின்பு, காவல்துறை வாகனங்களை தங்கள் குடும்ப தேவைக்கு காவல்த்துறை அதிகாரிகள் பயன்படுத்துவது குறைய தொடங்கியது.

இந்த நிலையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய சவுக்கு சங்கர், பின் அந்த வேலை என்னாச்சு என்று பலருக்கும் தெரியாது. அரசியல் விமர்சகராக எப்படி இவர் உருவெடுத்தார், யார் இவருக்கு தகவல்களை பின்னணியில் கொடுப்பது என்கின்ற பல கேள்விகளுக்கு இன்று வரை, விடை தெரியாமல் மர்மமாகவே இருக்கின்றது. இந்த நிலையில் சவுக்கு சங்கரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க தமிழ் சினிமாவின் முக்கிய பெண் இயக்குனர் ஒருவர் சவுக்கு சங்கரை அணுகியுள்ளார்.

அந்த பெண் இயக்குனருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போதே ஒரு காலக்கெடு நிர்ணயம் செய்த சவுக்கு சங்கர், குறிப்பிட்ட இந்த காலத்திற்குள் என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை நீங்கள் எடுக்கவில்லை என்றால், நான் இந்த கதையை வேறு ஒரு இயக்குனருக்கு கொடுத்து விடுவேன் என்று ஆரம்பத்திலேயே அந்த பெண் இயக்குனுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். அந்த வகையில் ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட அந்த காலத்திற்குள் பெண் இயக்குனர் படத்தை எடுக்கவில்லை.

இதனால் சவுக்கு சங்கர் வாழ்க்கை கதையை படமாக எடுப்பதற்கான பேச்சுவார்த்தை இயக்குனர் வெற்றிமாறன் உடன் நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது சவுக்கு சங்கர் மற்றும் வெற்றிமாறன் இடையே ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கதை சவுக்கு சங்கரின் தந்தையார் இறப்பதற்கு முன்பு இருந்தே தொடங்குகிறது.

சவுக்கு சங்கர் ஒரு அரசியல் விமர்சராக எப்படி உருவெடுத்தார். மேலும் பல அரசியல் கட்சிகளிடம் இவருக்கு உள்ள தொடர்புகள் குறித்து இந்த படத்தில் பல காட்சிகள் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் விரைவில் இந்த படத்திற்கான நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு மற்றும் தயாரிப்பாளர்கள் உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.