சூர்யாவை தொடர்ந்து அசிங்கப்படுத்திய வெற்றிமாறன்… அவமானம் தாங்கமுடியாமல் வடிவாசலில் இருந்து வெளியேறிய சூர்யா..

0
Follow on Google News

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கமிட்டான வாடிவாசல் திரைப்படம் ஆரம்பித்த வேகத்துடன் அப்படி நிற்கிறது. இந்த படத்தில் அமீரை உள்ளே கொண்டு வந்த போது கடும் அதிருப்தி அடைந்த நடிகர் சூர்யா, ஏற்கனவே எங்கள் குடும்பத்திற்கு அமீருக்கு இடையில் பிரட்சனை ஓடி கொண்டிருக்கிறது அதனால் அமீர் வேண்டாம் என இயக்குனர் வெற்றிமாறனிடம் தெரிவித்துள்ளார் சூர்யா.

ஆனால், வெற்றிமாறன் அதெல்லாம் முடியவே முடியாது. வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தை நான் அமீரை மனதில் வைத்தே தான் எழுதினேன் என்று கரராக ஆரம்பத்திலேயே அமீரை வாடிவாசல் படத்திலிருந்து மாற்றவே முடியாது என்று தெரிவித்திருக்கிறார் வெற்றி மாறன். இந்நிலையில் மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா குடும்பத்திற்கு அமீருக்கு இடையில் பிரச்சனை வெடித்தது.

இதில் சூர்யா உறவினர் ஞானவேல் ராஜா மிக கடுமையாக அமீரை பேச. அமீருக்கு ஆதரவாக சினிமா துறையை சேர்ந்த பலரும் ரவுண்டு கட்டி ஞானவேல் ராஜாவை வெளுத்து விட்டவர். இந்த நிலையில் மீண்டும் வெற்றிமாறனிடம் வடிவாசலில் அமீரின் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லாலை நடிக்க வைக்குமாறு சூர்யா கேட்டதாகவும், அதற்கு வெற்றிமாறன், வடிவாசலில் இருந்து அமீரை மாற்ற முடியாது , உங்களுக்கு இஷ்டம் இருந்தால் நடிக்கலாம், இல்லையெனில் தாராளமாக நீங்கள் விலகிக் கொள்ளலாம்” இன்று சூர்யாவின் முகத்தில் அடித்த மாதிரி பட்டென்று வெற்றிமாறன் பேசியதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் சூர்யா குடும்பத்தினருக்கும் அமீருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைக்கு அமீர் பக்கம் வெற்றிமாறன் உறுதியாக இருப்பதால் சூர்யாவுக்காக அமீரின் நட்பை இழக்க வெற்றிமாறன் தயாராக இல்லை, அதே வேலையில் அமீரின் நட்புக்காக சூர்யாவை இழக்க தயாராக இருக்கிறார் வெற்றிமாறன் என்பதை வெற்றிமாறன் மறைமுகமாக பல வகையில் வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் தாணுவிற்கும் சிவக்குமார் குடும்ப உறவினர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில், தற்போது ஞானவேல் ராஜாவிற்கும் அமீருக்கும் நடக்கும் பிரச்சனையில் நிச்சயம் தயாரிப்பாளர் தானுவும் அமீர் பக்கமே நிற்பார் என எதிர்பார்க்க பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெற்றிமாறனை அழைத்து வாடிவாசல் படத்தை விரைவில் எடுங்க நான் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறேன் வாடிவாசல் காலதாமதம் ஆனால் என்னால், உங்களுக்கு கால் சீட் தரமுடியாது என அழுத்தம் கொடுத்துள்ளார், ஆனால் வெற்றிமாறன் விடுதலை பார்ட் 2 வில் பிசியாக இருக்கிறேன் என தெரிவிக்க, இதில் கடும் அப்செட்டாகி உள்ளார் சூர்யா,

இந்நிலையில் ஒவ்வொரு முறையும் வாடிவாசல் குறித்து வெற்றிமாறனிடம் சூர்யா பேசும் போது. தகுந்த பதில் தராமல், தொடர்ச்சியாக சூர்யாவை ஒரு பொருட்டாகவே கருதாமல் அவமானப்படுத்தும் விதத்தில் வெற்றிமாறன் நடந்து கொண்டதால் வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரணை சந்தித்த வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் கதையை தெரிவித்து சூர்யாவுக்கு பதில் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் என கூறப்படுகிறது.

ஆனால் கதையை கேட்ட ராம்சரண் தனக்கு கதை பிடிக்கவில்லை என தெரிவித்ததால், தற்பொழுது வேறு ஒரு நடிகரை வாடிவாசல் படத்தில் நடிக்க வைக்கும் ஏற்பாட்டில் வெற்றிமாறன் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.