தமிழ்நாட்டு மக்களையும் தமிழ் சினிமாவையும் பிரித்து வைத்து பார்க்க முடியாது, அந்த அளவுக்கு சினிமாவோடு ஒட்டி வாழ்ந்து வரக்கூடியவர்கள் தமிழக மக்கள், இதன் காரணமாகவே சினிமாவில் புரட்சி வசனங்கள் பேசி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர்களை தமிழக மக்கள் தங்களின் தலைவனாக ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தலைவனாக மட்டுமல்ல முதலமைச்சராக எம்ஜிஆர் என்கின்ற ஒரு நடிகரை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தவர்களும் தமிழக மக்கள் தான்.
எம்ஜிஆர் காலத்தில் வந்த சினிமாவில் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் பாடமாக எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் வெளியான படங்கள் அமைத்திருந்தது, அதே காலகட்டத்தில் நடித்த மற்ற நடிகர்கள் படமும் அவ்வாறே அமைத்தது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் வருகின்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நச்சுக்களை விதைக்கும் வகையில், குறிப்பாக இளைஞர்களை தவறான பாதையில் செல்வதர்க்கு தூண்டும் வகையில், குறிப்பாக நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் வெளியாகும் திரைப்படங்களை எப்படி சென்சார் போட் அனுமதிக்கிறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படங்களில் காவல்துறையினரை மக்களுக்கு எதிரான ஒரு கொடூரமானவர்கள் போன்று சித்தரிக்கும் காட்சிகள் அவருடைய படங்களில் இடம் பெற்று வருவதின் பின்னணியில் உள்ள ஆபத்து குறித்து இதற்கு முன்பும், தற்பொழுதும் கூட சமூக அக்கறை கொண்ட பலரும் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான விசாரணை, வட சென்னை போன்ற படங்களில் மக்களுக்கு எதிரானவர்கள் காவல்த்துறையினர் என்பது போன்று காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அதே பாணியில் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்பொழுது வெளியாகியுள்ள விடுதலை படமும் அமைத்துள்ளது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
விடுதலை படத்தில் வரும் ஒரு காட்சியில், மலை கிராமங்களுக்கு ரோடு போடுவது பாசிசம் என்றும், பெரும் முதலாளிகள் இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதற்கே ரோடு போட படுகிறது என்கிற ஒரு நச்சு விதையை வெற்றிமாறன் விடுதலை படத்தின் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.
மேலும் அந்த காலத்தில் துப்பாக்கி ஏந்தி போராடியவர்களே இன்று படித்து முன்னேறி கொண்டு இருக்கும் இன்றைய காலத்தில், 40 வருடம் பழைய கதைகளை காவல் துறை மற்றும் அரசாங்கம் பற்றி ஒரு வெறுப்பு உணர்ச்சியை மக்கள் மத்தியில், இன்றைய இளைஞர்கள் மூளையில் விதைத்து , எங்கு இருந்தோ நம் உள்ளநாட்டில் கலவரத்தை, பொருளாதாரத்தை சிதைக்கும் அந்நிய நாட்டின் சதி திட்டங்களுக்கு துணை போகும் வகையில் அமைத்துள்ளது வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் தமிழகத்தில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டம், ஐபிஎல் போன்ற போராட்டங்களில் கலவரக்காரர்கள் போலீசார் மீது நடத்திய தாக்குதலுக்கு பின்பே அந்த போராட்டம் கலவரமாக உருவெடுத்தது, இப்படி குறிப்பாக இளைஞர்கள் போலீஸ் வாகனங்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்துவதற்கு தமிழ் சினிமாவில் இடம்பெறும் போலீசாரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் தான் தமிழக இளைஞர்களை தவறாக வழிநடத்தி செல்கிறது என்கிற விமர்சனம் எழுந்துள்ள நிலையில்.
நாட்டின் பாதுகாப்பு கருதி சென்சார் போட் திரைப்படங்களுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், குறிப்பாக தொடர்ந்து போலீசார் குறித்து வெறுப்பு உணர்ச்சியை மக்கள் மத்தியில் தூண்டும் விதத்தில் தன்னுடைய திரைப்படங்களில் காட்சிகளாக அமைக்கும் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் இந்த நாட்டிற்கே ஆபத்தானவர்கள் என எச்சரிக்கின்றனர் தேச பற்றாளர்கள்.