தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் ஒரு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் இதற்கு முன்பு நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் அவர்களுடைய உதவியாளர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் இதுவரை சம்பளம் இதற்கு முன்பு சம்பளம் கொடுத்து வந்தார்கள். தயாரிப்பு நிறுவனம் சம்பளம் கொடுகின்றது என்பதற்காக இயக்குனர்கள்,நடிகர், நடிகைகள் தங்களுக்கான உதவியாளர்களை ஒரு கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக பயன்படுத்தினார்கள்.
மேலும் ஒவ்வொரு படத்திற்கும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் சம்பளத்தை அதிகரித்து செல்வது போன்று தங்களின் உதவியாளர்கள் சம்பளத்தையும் அதிகரித்துக் கொண்டு சென்றார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய செலவை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு சினிமா திரையுலகில் ஒரு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதில் இனிவரும் காலங்களில் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களின் உதவியாளர்களுக்கு அந்தந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் கையில் தான் சம்பளம் தரவேண்டும், இனி தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சம்பளம் தர முடியாது என்றும் அந்த சீர்திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இயக்குனர்கள் உதவியாளர்களுக்கு அதிக சம்பளத்தை தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு, குறைந்த சம்பளத்தை அவர்களின் உதவியாளர்கள் கொடுப்பார்கள்.
ஆனால் அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர்களிடம் பணத்தை முழுமையாக உதவியாளர்களுக்கு கொடுத்து விடுவார். இதனால் அவருடைய உதவியாளர்கள் ரொம்ப சந்தோசமாகவும் இருந்து வந்தனர். வெங்கட் பிரபு படத்திற்கு மாதம் 45 ரூபாய் அவருடைய உதவியாளருக்கு சம்பளம் கொடுத்து வந்தார. தற்பொழுது தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் வெங்கட் பிரபு, புதியதாக நடிகர் நாகசைந்தாயா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இந்த படத்திற்காக வெங்கட் பிரபு உதவி இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 65 சம்பளம் என நிர்ணயம் செய்துள்ளார். ஆனால் தற்பொழுது தெலுங்கு சினிமாவில் இந்த சம்பளத்தை தயாரிப்பு தரப்பில் இருந்து கொடுக்க மாட்டோம் என்கின்ற சீர்திருத்தத்தினால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
அதாவது உதவியாளர்கள் சம்பளத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தான் கொடுக்க வேண்டும் என்கின்ற ஒரு சூழல் உருவானதால், அந்த பணத்தை எப்படி அந்த சம்பளத்தை எப்படி வெங்கட் பிரபு கொடுக்க போகிறார் என்கின்ற ஒரு பெரிய சிக்கலில் சிக்கியுள்ளார் வெங்கட்பிரபு. இந்த நிலையில் தன்னுடைய இயக்குனர் சம்பளத்தை அதிகரிக்கும் முடிவில் வெங்கட் பிரபு இருப்பதால், அதை தயாரிப்பு தரப்பில் ஏற்றுக் கொள்வாரா என்கின்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.