இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் சென்சார் பணிகள் என அனைத்தும் முடிந்து தயார் நிலையில் உள்ள நிலையில், இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் கேம் சேஞ்சர் ப்ரொமோஷன் நிகழ்ச்சி முடிந்த நிலையில் அடுத்து சென்னையில் நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னை நிகழ்ச்சியில் சீப் கெஸ்டாக லோகேஷ் கனகராஜ் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யை கலந்து கொள்ள வைப்பதற்கான முயற்சியில் அந்த கேம் சேஞ்சர் பட குழுவினரும் இயக்குனர் சங்கரும் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேம் சேஞ்சர் படத்தின் ப்ரொடியூசர் தில்ராஜ் ஏற்கனவே விஜய் நடித்த வாரிசு படத்தின் தயாரிப்பாளரும் கூட, அதனால் தில்ராஜ் நடிகர் விஜயிடம் நேரடியாக இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதே போன்று நடிகர் ராம் சரணம் விஜயை தொடர்பு கொண்டு இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இருந்தாலும் நடிகர் விஜய் கலந்து கொள்வாரா.? என்பது இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் விஜய் இந்த நிகழ்வு மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. காரணம் கேம் சேஞ்சர் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது விஜய் தான் என்கின்ற தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் நடிப்பதற்கு முன்பு சங்கர் அந்த படத்திற்கான முழு கதையையும் தயார் செய்து விட்டு முதன் முதலில் நடிகர் விஜய்யை சந்தித்து இந்த படத்தின் கதையை தெரிவித்திருக்கிறார். கதையைக் கேட்ட உடனே மிரண்டு போன நடிகர் விஜய், மிக பிரமாதமாக இருக்கிறது, இதில் நான் நடிக்கிறேன் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.
ஆனால் அதன் பின்பு நடிகர் சங்கர் ஒரு கண்டிஷனை போட்டிருக்கிறார். அதாவது நடிகர் விஜய் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ஒன்றரை வருஷம் இந்த படத்திற்காக செலவு செய்ய வேண்டும் என்று சங்கர் தெரிவித்து இருக்கிறார். உடனே இந்த ப்ராஜெக்ட் வேண்டாம் என்று விஜய் சங்கரிடம் தெரிவித்து இருக்கிறர்.
சங்கர் எவ்ளவோ எடுத்து பேசியும், இல்ல சார், ஒரு படத்துக்கு அவ்வளவு நாள் என்னால செலவு செய்ய முடியாது என்று, விஜய் பேக் அடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்பு விஜய் வாரிசு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து தெலுங்கு பட ஹீரோ ரேம் சரனிடம் கேம் சேஞ்சர் கதையை தெரிவித்து கமிட் செய்துள்ளார் சங்கர்.
அந்த வகையில் கேம் சென்டர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டால், இது போன்ற சுவாரசியமான பல சம்பவங்களை விஜய் மேடையில் பேச வாய்ப்பிருக்கிறது என்பதால் விஜய் கலந்து கொள்வாரா என்கின்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.