தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தமிழில் அறிமுகமான சித்தார்த், அடுத்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படம் என ஆரம்ப கட்டத்தில் பெரும் இயக்குனர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, சித்தார்த் நடித்த படங்கள் பெரும் தோல்வியை சந்தித்து. இதன் பின்பு ராசி இல்லாத நடிகர் என ஓரம் கட்டப்பட்ட நடிகர் சித்தார்த், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் காணாமல் போனார்.
பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய சித்தார்த், பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை டிவீட்டரில் பதிவு செய்து பொழுதை கழித்து வந்தார். ஒரு கட்டத்தில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்யை மிக கடுமையாக விமர்சனம் செய்து நாடு முழுவதும் கடும் எதிப்புக்கு ஆளானார் சித்தார்த். இதனை தொடர்ந்து சித்தார்த் நடிக்கும் விளம்பரம் படங்களில் நடிக்கும் பொருட்களை புறக்கணிப்போம் என வட மாநில மக்கள் எதிப்பு தெரிவித்தனர்.
விளம்பர படங்களில் சித்தார்த்தை புறக்கணிக்க தொடங்கியது வியாபார நிறுவனங்கள். இதனால் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் விளம்பர படங்களிலும் வாய்ப்பு இல்லாமல் இருந்த சித்தார்த், இந்திய வீராங்கனை சானியா நேவாலை பாலியல் ரீதியாக ஆபாசமாக விமர்சனம் செய்து நாடு முழுவதும் கடும் எதிப்புக்கு உள்ளாகியுள்ளார். எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் தன்னுடைய டிவீட்டர் பக்கத்தை இழுத்து மூடினார் சித்தார்த்.
இந்த நிலையில் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் பாகம் 2 படத்தில் கமிட்டாகி இருந்த சித்தார்த், இந்திய வீராங்கனை சானியா நோவல் குறித்த சர்ச்சையில் சிக்கிய போது, அவரை இந்த படத்தில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தது படக்குழு, இதன் பின்பு சானியா நேவால் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை சானியா நேவாலுக்கு அனுப்பிய சித்தார்த், மீண்டும் இந்தியன் 2 படத்தின் இயக்குனர் சங்கரிடம், என்னை இந்த படத்தில் இருந்து தூக்க வேண்டாம் என கதற, மனம் இறங்கி வாய்ப்பு கொடுத்துள்ளார் சங்கர்.
இந்த நிலையில் சில காலம் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் அமைதியாக இருந்த நடிகர் சித்தார், தற்பொழுது மீண்டும் விமான நிலையத்தில் தன்னை இந்தியில் பேசி துன்புறுத்தியதாக சிஆர்எப் வீரர்கள் மீது குற்றசாட்டை தெரிவித்து சர்ச்சையை ஏறப்டுத்தியுள்ளார்.ஆனால் நடிகர் சித்தார்த்தை பரிசோதனை செய்தது தமிழகத்தை சேர்ந்த சிஆர்எப் வீரர்கள், அவர்கள் தமிழில் தான் பேசினார்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் சிஆர்எப் வீரர்கள் மீது அவதூறு பரப்பியது, மற்றும் மொழி ரீதியாக பிரச்சனையை உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்ட நடிகர் சித்தார்த் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும், அப்படி இல்லை என்றால் இந்தியன் 2 படத்தை புறக்கணிப்போம் என்று ஒரு தரப்பினர் பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தியன் 2 படம் ,மிக பெரிய பட்ஜெட்டில் ஒரு பேன் இந்தியா படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.தற்பொழுது சித்தார்த் ஏற்படுத்திய இந்தி சர்ச்சையின் காரணமாக இந்தியன் 2 படமும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது, இதனால் டென்ஷனில் இருந்த இயக்குனர் சங்கர், நடிகர் சித்தார்த்தை செம்ம டோஸ் விட்டுள்ளார், ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய போது உனக்கு இந்த படத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டது,
ஆனால் இனி இது போன்ற தவறு நடக்காது என்று உறுதி அளித்ததால் தான் இந்த படத்தில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது, ஆனால் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி, உனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு தண்டனையாக எங்களுக்கு, உன்னால் என்னலாம் தொந்தரவு கொடுக்க முடியுமோ, அதை செய்து வருகிறாய் என நடிகர் சித்தார்த்தை லெப், ரைட் வாங்கியுள்ளார் சங்கர் என கூறப்படுகிறது.