கதை திருடுவதில் அட்லீயை மிஞ்சிய இயக்குனர் சங்கர்…. கையும் களவுமாக மாட்டிய பரிதாபம்..!

0
Follow on Google News

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு பஞ்சாயத்து பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது. சர்க்கார் படத்தின் கதை தன்னுடையது என வருண் என்கிற ராஜேந்திரன் நீதிமன்றம் வரை சென்று வழக்கு பதிவு செய்தார். இதன் பின்பு இயக்குனர் பாக்கியராஜ் முன்பு இந்த பஞ்சாயத்து வந்தது, அவர் விசாரித்து சர்க்கார் கதை வருண் என்கிற ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து திருடப்பட்டது தான் என உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

கதை மற்றும் காட்சிகளை திருடுவதில் இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் முக்கிய பங்காற்றி வருகின்றவர். அவர் இயக்கிய ராஜா ராணி முதல் படம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் கதை என விமர்சனம் எழுந்தது, அதே போன்று அவர் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல், பிகில் என அணைத்து படங்களும் எதாவது ஒரு படத்தின் சாயலில் கதை அமைந்திருக்கும், மேலும் அட்லீ பல படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள்.

அப்படியே எதாவது ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டிருக்கும். இது பல முறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் காப்பியடித்து மாட்டி கொண்டாலும் அதை பெரிதாக பொறுத்தப்படுத்த மாட்டார் அட்லீ. இந்நிலையில் அட்லீ குரு என்று அழைக்கப்படும் இயக்குனர் சங்கரும் கதை திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா என்ற கதை ‘தித் திக் தீபிகா’ என்ற நாவலில் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இது 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்” திரைப்படம் வெளியான பின்பு தான் ‘ஜுகிபா’ கதை திருடப்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் பின்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று, எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஷங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவிட்டது.

விசாரணையின் போது இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையிலேயே பிடிவாரண்ட் கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டு எந்திரன் கதை திருட்டு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இயக்குனர் ஷங்கரின் மற்றொரு கதை திருட்டு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். சங்கர் இயக்கத்தில் மிக பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன்.

இந்த படம் வெளிவருவதர்க்கு முன்பு தனியார் வர இதழில் வெளியான கதையாசிரியர் ஒருவரின் கதை தான் இந்தியன் படம் என்றும், தற்போது உள்ளது போன்று சமூக ஊடகங்கள் அப்போது இருந்திருந்தால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து இயக்குனர் அட்லீ அவருடைய குரு சங்கரிடம் இருந்து தான் கதை திருடும் வித்தையை கற்று கொண்டிருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

உன் அரசியல் நம்மகிட்ட வேண்டாம்.. விஜய்க்கு ஆப்பு வைத்த பீஸ்ட் பட தயாரிப்பாளர்..! என்ன நடந்தது தெரியுமா.?