கடந்த நான்கு வருடங்களாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை, இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் சங்கர். மேலும் பாதியிலேயே நின்ற இந்தியன் 2 படத்தை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட உள்ளது. சங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான எந்திரன் 2.0 மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.
இதனால் தற்பொழுது சங்கர் எடுத்து வரும் ராம்சரனின் நடிப்பில் புதிய படம் மற்றும் இந்தியன் 2 படத்தையும் மிக கவனமாக ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைத்து வருகிறார். இந்த நிலையில் வரலாற்று கதையை மையமாக வைத்து படம் எடுக்க முடிவு செய்து, சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி கதையை படமாக்க உள்ளார் சங்கர்.
இந்த படம் சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் எடுப்பதற்கான அணைத்து வேலைகளிலும் இறங்கியுள்ளார் சங்கர். தமிழர்களின் பெருமையை உலகறிய செய்யும் இந்த வரலாற்று படத்தில் யார் ஹீரோ என்கின்ற பேச்சு பரபரப்பாக பேசப்பட்ட வந்தது. தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படம் மற்றும் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம், ஆகிய இரண்டு படங்களை முடித்துவிட்டு சங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் சூர்யா நடிக்கலாம் என தகவல் வெளியானது.
ஆனால் இது குறித்து சூர்யாவிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தை சங்கர் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது பெரும் பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால், இந்தியா முழுவதும் இந்த படம் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக, பேன் இந்தியா ஸ்டார் தான் இந்த படத்தில் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால், கேஜிஎப் படத்தின் கதாநாயகன் யாஷ் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார் சங்கர்.
யாஷ் தேர்வு செய்வதற்கு முன்பு, வேள்பாரி படத்தில் யார் ஹீரோ என்பது குறித்து சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது சில நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தை சுட்டிக்காட்டி, அதில் சூர்யா போர் வீரனாக போதி தர்மன் தஞ்சையில் இருக்கும் காட்சிகளை தெரிவித்து, வேள்பாரி படத்தில் சூர்யா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என சங்கரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு சங்கர், வேள்பாரி படத்தில் குறு நிலா மன்னராக நடிக்க சூர்யாவுக்கு உயரம் பத்தாது. ஏழாம் அறிவு படத்தில் சில நிமிடம் மட்டும் தான் அவர் வரலாற்று காட்சிகளில் நடித்திருப்பார், அதனால் அவருடைய உயரம் பிரட்சனை இல்லை, ஆனால் வேள்பாரி முழுக்க வரலாற்று படம் என்பதால், சூர்யா உயரத்தை பல காட்சிகளில் நாம் சரி செய்ய முடியாது என அதனால் சூர்யா இந்த படத்திற்கு செட்டாக மாட்டார் என சங்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் வேள்பாரி பெரிய பட்ஜெட் படம் என்பதில் ஃபேன் இந்தியா ஸ்டார் நடிப்பதுதான் சரியாக இருக்கும் என்றும் சங்கர் உறுதியாக இருந்துள்ளார். அதனால் தான் சூர்யாவை வேள்பாரி படத்திலிருந்து தூக்கி எறிவதற்கான காரணம் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இருந்தும் சூர்யாவின் உயரத்தை பற்றி ஆலோசனை செய்தது சூர்யாவுக்கு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அசிங்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
My choice is
VIJAY SETHUPATHI
KARTHI
JEYAM RAVI
Ah
Ah ah
Comments are closed.