கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் சங்கர் சோதனை மேல் சோதனையை சந்தித்து வருகிறார். சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் 2 படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதன் பின்பு சங்கர் இயக்கத்தில் எந்த ஒரு படமும் இதுவரை வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை தொடங்கிய சங்கர் படத்தின் படப்பிடிப்பில் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் நடந்த பிரச்சனையின் காரணமாக இந்தியன் 2 படம் பாதியிலேயே நின்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து பேன் இந்தியா படம் ஒன்று இயக்குகிறார் சங்கர். அதே நேரத்தில் தற்பொழுது இந்தியன் 2 படத்தில் நடந்த பிரச்சனை அவருக்கு தயாரிப்பார்க்கும் நடந்த பேச்சுவார்த்தை சுமுக முடிவு எடுக்கப்பட்டு மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.
ஒரே நேரத்தில் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படம் மற்றும் இந்தியன் 2 படங்களை இயக்கி வருகிறார் சங்கர்.தீபாவளிக்கு முன்பு 20 நாட்கள் ராம்சரண் இயக்கும் படத்தின் முடித்துவிட்டு தற்பொழுது தீபாவளி முடிந்ததும் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்திற்காக 15 நாட்கள் ஒதுக்கியுள்ள சங்கர், அடுத்து ராம் சரண் இயக்கம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்தியன் 2 படத்தில் முப்பது நபர்கள் அழுக்கு உடை அணிந்து நடிக்கும் காட்சிகள் படமாக்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார் சங்கர். ஆனால் படக் குழுவினர் சங்கர் அழுக்கு உடை என்றதும் முதல்வன் படத்தில் அர்ஜுன் சேற்றில் எழுந்து வருவது போல் கட்சி என நினைத்து கொண்டு, 30 நபர் உடைகள் சேற்றில் எழுந்து வந்தது போல் ஏற்பாடு செய்துள்ளார்கள். இதை பார்த்த சங்கர் செம்ம சென்சனாகி உள்ளார்.
உடனே தனது உதவி இயக்குனர்களை அழைத்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார், அழுக்கு உடை தான் என்று சொன்னேன், இப்படி சேற்றில் எழுந்து வரவேண்டும் என்று நான் சொல்ல வில்லை. 15 நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு நான் அடுத்து தெலுங்கில் ராம்சரண் படபிடிப்பு நடந்த வேண்டும் அதனால் நான் சொல்வதை கவனமாக கேட்டு செய்யுங்கள், மீண்டும் இதுபோன்று தவறுகள் நடக்க வேண்டாம் என்று உதவி இயக்குனர்களிடம் சங்கர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.