என்ன பெரிய பிரமாண்ட இயக்குனர்… இயக்குனர் சங்கரையே உதறி தள்ளிய அஜித்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் சங்கர், இவர் தனது படத்தின் ப்ரமோஷன் செய்வதற்கே அதிகம் செலவு செய்ய கூடியவர், ஆடியோ வெளியிட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த கூடியவர் இயக்குனர் சங்கர், இசை வெளியிட்டு விழா என்பது அந்த படத்தின் இசை அமைப்பாளருக்கு கிடைக்கும் மிக பெரிய அங்கீகாரம். இதற்காகவே இயக்குனர் சங்கர் படத்தில் இசை அமைக்க ஏ. ஆர்.ரகுமான் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அர்ஜுனை வைத்து தனது சினிமா இயக்கத்தை தொடங்கிய சங்கர், ரஜினி, கமல், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர், இதுவரை அஜித் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை, ஆனால் சங்கர் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பாதியிலே அந்த படத்தில் இருந்து அஜித் வெளியாகிய தகவல் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நடிகர் அஜித் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி, ஆடியோ வெளியிட்டு விழா என எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் என ஒப்பந்தம் செய்து கையெழுத்து போட்ட பின்பு தான் படத்தில் நடிக்க தொடங்குவர், ஆனால் நடிகர் அஜித்துக்கு நேர் எதிரானவர் இயக்குனர் சங்கர். இப்படி இருக்கும் சூழலில் இயக்குனர் சங்கர் படத்தில் நடிகர் அஜித் நடிக்க வேண்டும் என்றால் இந்த இரண்டில் ஏதாவது ஓன்று நடக்க வேண்டும்.

ஒன்று இயக்குனர் சங்கர் அவருடைய படத்தின் ப்ரோமோஷன் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு அஜித் வரவில்லை என்றாலும் பரவாயில்லை என விட்டு கொடுக்க வேண்டும், அல்லது அஜித் தனது நிலைப்பாட்டில் இருந்து தன்னை மாற்றி கொண்டு சங்கர் படம் என்பதால் பரவாயில்லை ப்ரோமோஷன் நிகழ்ச்சி மற்றும் ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவிக்க வேண்டும், ஆனால் இந்த இரண்டும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

இந்நிலையில் நடிகர் அஜித் ஒரு காலகட்டத்தில் அடிக்கடி பத்திரிகையாளர்களை அவரே அழைத்து சந்தித்து பேட்டி கொடுப்பது, சினிமா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என, வழக்கம் போல் மற்ற நடிகர்கள் போன்று தான் அவரும் இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் அவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்கிற முடிவை எடுக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் அஜித் வழக்கம் போல் சினிமா நிகழ்ச்சி, பத்திரிகையாளர் சந்திப்பு என இருந்த காலத்தில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படம் மிக பிரமாண்ட வெற்றியை பெற்று அடுத்து அவர் இயக்கிய படம் ஜீன்ஸ், இந்த படத்தில் முதலில் நடிகர் பிரசாந்த் பதில் அஜித் குமார் நடிப்பதாக இருந்துள்ளது, இதற்காக நடிகர் அஜித்திடம் கதையை தெரிவித்த சங்கர். ஜீன்ஸ் படத்தில் அஜித்தை கமிட் செய்துள்ளார்.

ஜீன்ஸ் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி, அதில் சுமார் மூன்று நாட்கள் அஜித் பங்கேற்றுள்ளார். ஆனால் படத்தின் ஆரம்ப கட்டத்திலே, இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் அஜித் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் உச்சக்கட்டத்தை அடைந்ததாகவும், இதன் பின்பு, இனி சங்கர் படத்தில் நடிப்பதில் அர்த்தம் இல்லை என்கிற முடிவு வந்துள்ளார் அஜித்.

இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் ஜீன்ஸ் ஆரம்ப கட்ட வேலைகளில் கலந்து கொண்ட அஜித், அந்த படத்தில் இருந்து பாதியிலே நடிகர் அஜித் வெளியேறியதாக கூறப்படுகிறது, இந்நிலையில் அந்த கால கட்டத்தில் நடிகர் அஜித் அந்த அளவுக்கு உச்சத்தில் இல்லை என்றாலும் கூட தனது தன்மானத்துக்கு ஒரு அவமரியாதை ஏற்படுத்துகிறது என்றால் அதில் எந்த ஒரு சமரசமும் கிடையாது என அப்போதே நடிகர் அஜித் நிரூபித்துள்ளதாக அஜித் ரசிகர்கள் ஜீன்ஸ் படத்தில் இருந்து அஜித் வெளியேறியது குறித்து கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.