மைனா, கும்கி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, அதில் 7 ரூபாய்க்கு கூட வழியில்லாமல் இருந்தேன், ஆனால் இன்று 2 கோடி ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி இருக்கேன். இதற்கெல்லம் காரணம் ஆண்டவராகிய ஜிசஸ் தான் என்றும். பிரச்சனைகள் வரத்தான் செய்யும், தற்கொலை செய்யும் அளவுக்கு எனக்கு சிந்தனைகளும் வந்துச்சு என தெரிவித்தவர் மேலும் அவர் வாழ்க்கையில் நடந்த அதிசயங்களை பகிர்ந்து கொண்டார்.
மைனா படப்பிடிப்பின் போது வாகனத்தில் சென்ற போது நான் தூங்கிவிட்டேன், உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே மிக பெரிய விபத்தில் எனது வாகனம் சிக்கியது, நான் தூங்கி கொண்டிருந்ததால் எனக்கு ஏதும் தெரியவில்லை என்னடா பயங்கர சத்தம் கேக்குது என்று எழுந்து எனக்கு ஏதும் ஆச்சா என்று பார்த்தேன் எனக்கு ஒன்றுமில்லை, எனது டிரைவர் பிரேக்கில் கால் வைத்தபடி அவருக்கும் ஓர் காயமும் இல்லை, பின்புறம் இருந்த எனது உதவி இயக்குநர்களுக்கு எந்த ஒரு காயமும் இல்லை.
ஆனால் என் வாகனம் பலத்த சேதம் அடைத்திருந்தது, எனது வாகனத்தின் பின்புறம் ஐ லவ் ஜிசஸ் என்று எழுதி இருப்பேன், அதை பார்த்து ஜிசஸ் க்கு நன்றி சொன்னேன், ஆண்டவராகிய கர்த்தரை நீங்க நம்பினால் உங்களை ஜிசஸ் கை விடமாட்டார். அதே போன்று மைனா படப்பிடிப்பின் போது இடத்தை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டு இயற்கை மிகுந்த அந்த இடத்திற்காக சென்ற போது, மேகங்கள் சூழ்ந்து இருந்தது, உடனே பத்து நிமிஷம் தனியா சென்று ஜிசஸ் கிட்ட பேசுறேன் நம்பமாட்டீங்க மேகங்கள் விலகி நான் நினைத்த அந்த காட்சி வந்தது, உடனே படப்பிடிப்பை தொடங்கினேன்.
மேலும் அவர் பேசியவர் ஒரு மதம் பிடித்த யானையை வைத்து 100 நாள் வேலை செய்திருக்கேன்.அதில் இந்த விஷயத்தை மட்டும் சொல்லுகிறேன். கும்கி படத்தோட கிளைமாக்ஸ் முல்லைபெரியாறு பிரச்சனை நடந்துட்டு இருக்கு. நான் படப்பிடிப்பை நடத்திட்டு இருக்கேன். என்னை பார்க்க யானை பாகன் வருகிறார், சார் என்ன புரட்சி பிராப்ளம் உண்டாகி என மலையாளத்தில் பேசுகிறார். நான் என்ன ஆச்சு என கேட்கிறேன். அவன் என்னை யானை பக்கத்தில் கூட்டிப்போனார்.
அப்போது அந்த யானை கண்ணுக்கும் காதுக்கும் இடையில் ஒரு கிலோ பனிநீர் வழிஞ்சிட்டு இருக்கு, அதெல்லாம் படத்தில் கட்சியாக கூட பதிவு செய்துள்ளேன். யானைக்கு மதம் ஆரம்பிச்சு இருக்கு என்று பாகன் சொல்கிறான், என்ன சார் சொல்ற என நான் கேட்க, ஓனர் கிட்ட சொல்லியாச்சு அவர் வந்து கொண்டிருக்கிறார் என பாகன் சொன்னார். 18 செக்போஸ்ட் கடந்து இந்த யணனையை அங்கே கொண்டு வருவதர்க்கு ஏற்பாடு செய்தேன்.
படப்பிடிப்பை இந்த யானையை வைத்து தொடங்கலாம் என்றேன், சார் சுமார் 150 பேர் சுற்றி இருக்கையில் என்ன வேண்டுமானலும் நடக்கலாம் என பாகன் சொன்னார். உடனே அந்த யானையின் தும்பிக்கை பிடித்து, ஜிசஸை வழிபட்டேன், இந்த படப்பிடிப்பு முடியும் வரை இந்த யானை என்னிடம் பூனையாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டேன், இதன் பின்பு அந்த யானை என்னிடம் ஒரு பூனையாக இருந்தது. படத்தை எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி முடித்தேன். ஜிசஸை நம்பினால் நிச்சயம் நம் வாழ்வில் அற்புதம் நிகழும் என இயக்குனர் பிரபு சாலமன் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.