இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி, மெட்ராஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறியப்பட்டாலும் கூட, ரஜினியை வைத்து தொடர்ந்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்ற பின்பு தான் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம்பிடித்தார். மேலும் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன கதை போல் ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்கள் எடுத்த பின்பு தான் பா.ரஞ்சித்ன் மேடை பேச்சுகள் வரம்பு மீறி சென்று பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.
தன்னை ஒரு சமூக நீதி இயக்குனராக ரஞ்சித் காட்டி கொள்ள முயற்சித்தாலும், அணைத்து சமூகத்தினரும் ஏற்று கொள்ள கூடிய ஒரு இயக்குனரை தான் சமூக நீதி இயக்குனராக மக்கள் ஏற்று கொள்வார்கள், ஆனால் குறிப்பிட்ட சில சமூகத்தினரை சீண்டுவது போன்று பேசி வந்த பா.ரஞ்சித்துக்கு சாதி படம் எடுக்க கூடிய இயக்குனர் என்கிற முத்திரை தான் அவர் மீது விழுந்தது, இதனால் ஒரு குறிப்பிட்ட சாதி வட்டத்துக்கும் பா.ரஞ்சித் அடைக்கப்பட்டார்.
மேலும் பா.ரஞ்சித் எப்போதெல்லாம் சர்ச்சைகூறிய வகையில் பேசி பிரட்சனை ஆகிறதோ, அப்போதெல்லாம் ரஜினிகாந்த் செய்த வேலை, இவருக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டதால் தான் இப்படி பேசுகிறார் என ரஜினிகாந்த் மீதும் விமர்சனம் எழுந்து வந்தது. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் மிக கோலாகலமாக நடந்து முடிந்த ராமர் கோவில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
அப்போது, ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் தான் வருடம் வருடம் இனி இங்கு வருவேன் என தெரிவித்த ரஜினிகாந்த், மேலும் பேசிய அவர். அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டதும் முதலில் நேரில் பார்த்த 200 பேரில் தானும் ஒருவர் என்பது சந்தோஷம் அளித்ததாக கூறினார்.
அப்போது ராமர் கோயில் என்பது மத அரசியலாக பார்க்கப்படுகிறதே என கேள்வி எழுப்பப்பட்ட போது, இது அரசியலா, ஆன்மீகமா என்றால் தன்னை பொறுத்தவரை ஆன்மீகம் தான் என நச்சென பதிலளித்த ரஜினிகாந்த். மேலும் ஒவ்வொருத்தரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எல்லோருடைய பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்று தெரிவித்தவர்.
ஒவ்வொருவருடைய கருத்தும் அவர்களின் சொந்தக் கருத்து என்றார். ஆனால், ராமர் கோயில் திறப்பு என்பது தன்னுடைய பார்வையில் ஆன்மீக பார்வை தான் என உறுதிபட பேசி இருந்தார் ரஜினிகாந்த்.இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமர் கோயில் திறப்புக்கு பின்னால் இருக்கும் மத அரசியலை கவனிக்க வேண்டியுள்ளது.
மதசார்பின்மையை கொண்ட இந்தியா எதை நோக்கி நகர்கிறது என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியுள்ளது. கோயில் கூடாது என்பது நமது பிரச்சினையில்லை. கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பது தான் நம் கவலை. இந்தியாவில் இப்படி ஒரு கோயில் திறப்பது அரசியலாக்குவதுதான் சிக்கல். நடிகர் ரஜினிகாந்த் கோயிலுக்குச் சென்றது அவருடைய விருப்பம். ஆனால், 500 ஆண்டுகள் பிரச்சினை தீர்ந்திருப்பதாகச் சொல்கிறார். அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
அவர் கூறியது சரியா, தவறா என்பதைத் தாண்டி அவரது கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது என பா.ரஞ்சித் பேசியது, அதாவது ரஜினிகாந்த் பேசியது அவரது சொந்த கருத்து கடந்து சென்று இருக்கலாம், ஆனால் ரஜினிகாந்த் பேசியதை விமர்சனம் செய்வது போன்று பேசியுள்ளது, இன்று பா.ரஞ்சித் என்கிற இயக்குனர் மிக பெரிய உயரத்தில் இருக்க கபாலி, காலா போன்ற படங்கள் மூலம் பா.ரஞ்சித்துக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினிகாந்த் பேசியதில் விமர்சனம் உள்ளது என பா.ரஞ்சித் பேசியுள்ளது, வளர்த்த மாடு மார்பில் பாயும் கதையாக உள்ளது, ரஜினிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என பலரும் விமர்சனம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.