தோளில் ஏறி காதை கடிப்பது நல்லதல்ல.. பா ரஞ்சித்தை கடுமையாக எச்சரித்த முக்கிய தலைவர்..

0
Follow on Google News

மாமன்னன் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்து இருந்த இயக்குனர் பா.ரஞ்சித், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம் என பா ரஞ்சித் பேசியுள்ளது தற்பொழுது மிக பெரிய புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு விளக்க கொடுத்துள்ள திராவிட இயக்கத்தை சேர்ந்த சுப வீரபாண்டியன். பா ரஞ்சித் அவர்கள் தேர்தல் நேரத்தில் என்ன சொன்னார்.? திமுகவுடன் கூட்டு சேரக்கூடாது. பட்டியல் இன சமூக கட்சியினர் மட்டும் தனித்துப் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொன்னார். ஆனால் அதை இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ரவிக்குமார் போன்றவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

பட்டியலின கட்சியினர் மட்டும் தனித்து நின்று போட்டியிடுவதால் மறுபடியும் அவர்கள் ஒதுக்கப்படுவார்கள். இது அவர்களுக்கும் வெற்றி வாய்ப்பை தராது. பா ரஞ்சித் அவர்களிடம் நேரடியாக கேட்கிறேன் மா சுப்பிரமணியன் அவர்கள் மேயராக இருந்த நினைவு குறிப்புகளை புத்தகமாக வெளியிட்டு இருந்தார். அந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பா.ரஞ்சித்தை அழைத்து வெளியிட்டார்.

எத்தனையோ இயக்குனர்கள் இருக்கிறார்கள், ஏன் திமுகவைச் சார்ந்த இயக்குனர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் ரஞ்சித்தை மதித்து அந்த விழாவுக்கு அழைத்தார் மா சுப்பிரமணியன். அந்த நிகழ்ச்சிக்கு பா ரஞ்சித்தை அழைத்த மா சுப்பிரமணியன் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் கிடையாது. எதற்காக பா ரஞ்சித்தை அவர் அழைக்கிறார். உங்களை நாங்கள் மதிக்கிறோம், உங்களை போன்றவர்கள், திறமை உள்ளவர்கள், பட்டியலின மக்களிடமிருந்து வருகின்றவர்கள் மேல் நிற்பதற்கு நாங்களும் எங்கள் தோள் கொடுக்கிறோம் என்பது தானே..

பா ரஞ்சித்தின் நீலம் தயாரித்த மஞ்சள் என்கின்ற நாடகத்தை நான் உட்பட பார்த்து பாராட்டினோம். பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் அவர்கள் முதல் படத்தின் அந்த முன்னோட்ட காட்சியை பார்த்து கட்டி தழுவி பாராட்டினேன். பள்ளிக்கூடங்களில், கல்விக்கூடங்களில் சாதி எப்படி ஒட்டி கிடைக்கிறது, சாதி வெறி எப்படி இருக்கிறது என விரிவாக காண்பிக்கப்பட்ட படம் அது.

எனவே சாதிக்கு எதிரான குரல் கொடுப்பது என்றால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட இயக்கமும், அம்பேத்கர் இயக்கமும் தான் என தெரிவித்த சுப வீரபாண்டியன் மேலும் மாமன்னன் படத்தில் அந்த கட்சியிலே இருக்கிற மாவட்டச் செயலாளர் ஒருவர் சாதி வெறி பிடித்தவர் ஆக இருக்கிறார், ஆனால் அந்த கட்சி தலைமை அதை ஏற்கவில்லை. அவர்களிடத்தில் சென்று அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவர் மகனிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் கட்சியை விட்டு வெளியே போ என் முகத்தில் முழிக்காதே என்று சொல்லுகின்ற தலைமையை மாரி செல்வராஜ் மிக சரியாக இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார்.

படம் மிக அருமையான படம் பா. ரஞ்சித் போன்றவர்களுக்கு நாம் வைக்கின்ற வேண்டுகோள், இதை வைத்துக் கொண்டு திமுகவை வீழ்த்தி விடலாம் என கருதாதீர்கள், யார் உங்களுக்கு தோழமையாக இருக்கிறார்களோ அவர்களை வெட்டி சாய்த்து விட்டு, தோளில் ஏறி காதை கடிப்பது அவ்வளவு நல்லத செயல் அல்ல, உங்களைப் போன்றவர்களிடம் நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை என மிக கடுமையாக எச்சரித்துள்ளார் சுப வீரபாண்டியன்.