அட்டகத்தி, மெட்ராஸ் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கி இருந்த பா ரஞ்சித்துக்கு கபாலி என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தை இயக்கும் வாய்ப்பை ரஜினி கொடுத்திருந்தார். கபாலி படம் வெளியாகி 300 கோடி வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. கபாலியின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கியிருந்தார் பா.ரஞ்சித்.இவ்வாறு பா ரஞ்சித் இரண்டு படங்களை ரஜினியை வைத்து எடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா ரஞ்சித்திடம், உங்கள் அரசியலை ரஜினி வாயிலாகவே சொல்லி விட்டீர்கள். அவருக்கு நீங்கள் பேசும் அரசியல் புரிந்ததா? இல்லையா என்று கூட எனக்குத் தெரியவில்லை என அங்கிருந்தவர் கேட்ட உடன், கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்து கைத்தட்டினார்கள். ரஞ்சித்தும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நக்கலாக சிரித்தார்.
பா.ரஞ்சித் நக்கலாக ரஜினி பற்றிய கேள்விக்கு சிரித்த செயல், ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் அதன் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதிலும் பா ரஞ்சித் தான் சிரித்ததற்கு விளக்கம் கொடுக்கவில்லை. மாறாக, “நம்ம சிரிப்புக்கு பவர் உள்ளது. சும்மா சிரிச்சதற்கே பல அர்த்தங்களை கூறுகின்றனர் ” என்று பேசியிருந்தார். பா ரஞ்சித்தின் இந்த நடவடிக்கை ரஜினி ரசிகர்களை மேலும் கொந்தளிக்க செய்தது.
தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களை செய்து கொண்டிருந்த பா ரஞ்சித்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்தவர் ரஜினிகாந்த் தான். ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படம் மூலமாக தான் பா ரஞ்சித் மிகவும் பிரபலமான இயக்குனர் ஆனார். இப்படி இயக்குனர் பா ரஞ்சித் சினிமாவில் முன்னேறுவதற்கு ரஜினிகாந்த் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். ஆனால், ரஜினிகாந்த் தலித் அரசியல் பற்றி தெரியாது என்று சொல்லும் போது அவர் எப்படி நக்கலாக சிரிக்கலாம் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் பா ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
மேலும் பா ரஞ்சித் நன்றி கெட்டவர் விசுவாசம் தெரியாதவர் என்றெல்லாம் திட்டி தீர்த்து கொண்டிருந்தனர். இந்த விவகாரம் பற்றி இயக்குனர் மோகன் ஜி நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில், பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் என்னை இயக்குனராக அறிமுகப்படுத்தியவர் ரிச்சர்ட் ரிசி. இவர் அஜித்தின் மச்சான் ஆவார். அடுத்ததாக நான் திரௌபதி படத்தை இயக்கிய போதும் அந்தப் படத்தில் எனக்காக ஃப்ரீயாக நடித்துக் கொடுத்தார்.
அவரது உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இன்று வரை எந்த மேடையில் ஏறினாலும் அவருக்கு நன்றி சொல்ல மறப்பதில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்களுக்கு எவ்வளவு பெரிய உதவியை செய்து இருக்கார். அவரை போய் நக்கல் செய்யலாமா உங்களுக்கு கொஞ்சமாவது நன்றி உணர்வு இருக்கா பா ரஞ்சித்?” என்ற கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினி சாரை எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் சமீப காலமாக அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர் ஒரு நல்ல மனிதர் ஆன்மீகவாதி அவரை போய்க்கி கிண்டல் செய்து என்ன பண்ண போறீங்க … என்று மோகன் ஜி பா ரஞ்சித்தை கண்டிக்கும் வகையில் விலாசி உள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.