மனுநீதி சோழனை வம்புக்கு இழுத்த பா.ரஞ்சித்.! சிவபெருமானையும் விட்டு வைக்கவில்லை..ஏன் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனராக இருந்து வருகின்றவர் இயக்குனர் பா. ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் அறிமுக இயக்குனரான பா.ரஞ்சித் குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ந்து இரண்டு படங்கள் இயக்கி சினிமா உலகில் மிக பெரிய உச்சத்தை அடைந்தார். ஒரு பக்கம் சினிமாவின் உச்சத்திற்கு சென்றாலும் மறுபக்கம் இவர் மேடையில் பேசும் சில கருத்துக்களால் பல சர்ச்சைகளில் சிக்கி வருவது வழக்கம்.

கடந்த 2019ம் ஆண்டு தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், மன்னர் ராஜ ராஜ சோழனை அவன் இவன் என ஏக வசனத்தில் பேசியவர், ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில்தான் தலித் சமூகத்தை சேர்ந்த மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டுள்ளது என்றும் அவருடைய ஆட்சி காலம் இருண்ட காலம் என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதனால் இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற வரை சென்றது இவரது இந்த பிரட்சனை. இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பா.ரஞ்சித், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ரஞ்சித், நான் ஒவ்வொரு முறையும் எனது குழந்தைகளுடன் யூடியூப் சேனல் பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சிகள் என்னை தொந்தரவு செய்வது போல் இருக்கும்.

அதில் மிக மோசமான கருத்துகளை குழந்தைகளிடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், இதை எப்படியாவது தடுக்க வேண்டும். அதேபோன்று குழந்தைகளுக்கு கிடைக்கும் புத்தகங்களில் தரம் மற்றும் அதில் சொல்லப்படுகின்ற கருத்துக்கள் பிற்போக்குத்தனம் நிறைந்ததாக இருக்கும். நம்பிக்கை அளிக்கக் கூடிய கதைகள் மித்து சம்பந்தமாக இருக்கும், கலாச்சாரம், மத வழிபாடு மற்றும் கடவுளுடைய மித்துக்கள் பற்றி சொல்வதாக இருக்கும்.

சிறுவயதில் கூட நம்ம படித்திருப்போம், மனுநீதி சோழன் பற்றிய ஒரு கதை, அதில் முழுக்க முழுக்க மித்து அடங்கியுள்ளது. அந்த கதையில் உண்மையே கிடையாது. ரொம்ப காலம் கழித்து தான் நமக்கு அது தெரியவருகிறது. மூன்றாவது படிக்கும் பொழுது நான் அதை படித்து இருக்கின்றேன், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, மனுநீதி சோழன் கதை அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது.

கடைசியில் சிவபெருமான் தோன்றி அவனுடைய குழந்தையை உயிர்பித்து கொடுப்பார் என்று சொல்லி அந்த கதையில் முடித்து இருப்பார்கள், எவ்வளோ போலியான ஒரு கதையை சின்ன வயதில் நம்முடைய பாட திட்டத்தில் நாம் படித்து இருக்கின்றோம். அது இப்ப வரையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, அதனால் குழந்தைகளை கவனத்தில் கொண்டு சில வேலைகள் செய்ய முடிவு செய்துள்ளோம் என மனு நீதி சோழன் மற்றும் சிவபெருமான் குறித்து பா.ரஞ்சித் பேசியுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது குறிப்பிடதக்கது.