மன்னிப்பு கேட்க சொன்ன பா.ரஞ்சித்… பிரென்ச் மொழியில் உதாரணம் காட்டி தரமான சம்பவம் செய்த குஷ்பு…

0
Follow on Google News

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான். எங்கப்பா கற்பழிக்கவே விட மாட்டேன் என்கிறார்கள், எனக்கும் ரொம்ப ஆசையாக இருந்தது திரிஷா கூட நடிக்கிறமா, நிச்சயமாக பெட்ரூம் சீன் இருக்கும், தூக்கி கட்டில்ல குஷ்புவை போட்ட மாதிரி, ரோஜாவை போட்ட மாதிரி போடலாம் என மிகவும் அருவருக்கதக்க வகையில் பேசிய மன்சூர் அலிகான், மேலும் 150 படத்தில் நம்ம பண்ணாத ரேப்பா.? நம்ம பண்ணாத அட்டூழியமா என இதற்கு முன்பு ரேப் சீன்களில் நடித்ததை வெட்கமே இல்லாமல் பெருமையாக பேசியிருந்தார் மன்சூர் அலிகான்.

இந்நிலையில் நடிகர் குஷ்பு குறித்து மிக கீழ்த்தரமாக மன்சூர் அலிகான் பேசியிருந்ததால், தேசிய மகளிர் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என குஷ்பு தெரிவித்ததை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது தேசிய மகளிர் ஆணையம். இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் தி.மு.க-வை சேர்ந்த ஷண்முகம் சின்னராஜ் என்பவர், மணிப்பூரில், பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதற்கு கருத்து தெரிவிக்காமல், நடிகை என்பதால் த்ரிஷாவுக்கு மட்டும் கருத்து தெரிவிப்பதா என குஷ்புவுக்கு சற்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்த குஷ்பு, திமுகவினர் இதைதான் செய்கிறார்கள். பெண்களை இப்படிதான் அவமதிக்க தவறான மொழியை பயன்படுத்துகிறார்கள். உங்களைப் போல் சேரி மொழியில் என்னால் பேச முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தி.மு.க உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது, உங்களைப் போன்ற முட்டாள்கள் அவரைச் சுற்றி இருப்பது உங்கள் தலைவருக்கு அவமானம். மு.க. ஸ்டாலின் உங்களை அழிக்க இந்த முட்டாள்கள் கூட்டம் வெளியே இருக்கிறார்கள், ஜாக்கிரதை” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் குஷ்பு சேரி என்கிற வார்த்தையை பயன்படுத்தியது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குஷ்புவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ‘சேரி மொழி’ என்று முத்திரை குத்துகிறார். சேரி என்பது தலித் வசிக்கும் இடங்களுக்கான தமிழ் வார்த்தையாகும், இது சாதி, பாலினம் மற்றும் பிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தலித் பெண்களின் தலைமுறைகளுக்கு இடையேயான எதிர்ப்பைக் கண்ட இடம்.

அவதூறு மற்றும் அவமரியாதையைக் குறிக்க இந்த வார்த்தையின் ‘பேச்சுமொழி’ பயன்பாட்டை இயல்பாக்குவது, அவதூறு என்ற அர்த்தத்திற்குள் சமூகத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையைப் புறக்கணிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குஷ்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சேரி குறித்த சர்ச்சை மிக பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது சொல்லாடலை நியாயப்படுத்தும் விதமாக குஷ்பு எக்ஸ் தளத்தில் விளக்கமளித்தார். அதில், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக தாம் எப்போதும் முன்னணியில் நிற்பேன் என்றும், பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லை தாம் பயன்படுத்தியதாகவும் குஷ்பு விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் சேரி என்கிற வார்த்தைக்கு அன்பு என குஷ்பு பொருள் கொடுத்துள்ளது சரியான விளக்கமா என்பதை உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.