நடிகர் விஜய் நடிப்பில் சன் பிக்சர் தயாரிப்பில், தமிழ் புத்தாண்டு அன்று வெளியான படம் பீஸ்ட். இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு படம் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய இரன்டு படங்களும் நல்ல வெற்றியை கொடுத்தது, இதில் டாக்டர் படம் மிக பெரிய வசூலை பெற்று தந்தது. மேலும் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் அடுத்த கட்டத்துக்கு அவரை எடுத்து சென்றது.
டாக்டர் படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன். இந்த படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியது. மேலும் இந்த படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது, விஜய் ரசிகர்கள் இயக்குனர் நெல்சனை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர், பீஸ்ட் படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் தந்தை SA சந்திரசேகரன், அந்த படத்தின் தோல்விக்கு ஒரே காரணம் நெல்சன் தான் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நெல்சன் அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கையில், பீஸ்ட் படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு கடும் அப்செட் ஆனதாக தகவல் வெளியானது, மேலும் படத்தின் இயக்குனர் நெல்சன் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து புதிய படத்துக்கான இயக்குனரை மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.
இயக்குனர் மாற்றம் குறித்து தகவல் அறிந்த நெல்சன் எப்படியாவது ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் தொடரவேண்டும் என்பதற்காக முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து உறுதியான எந்த ஒரு தகவலும் இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நெல்சன், நான் பணம் சம்பாதிக்க தான் சினிமாவுக்கு வந்தேன், எனது திறமைகள் அனைத்தையும் முழுக்க முழுக்க கோலமாவு கோகிலா படத்தில் போட்டேன், அது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அந்த வெற்றியை நான் இப்பொழுது முழுமையாக அறுவடை செய்து விட்டேன். இப்போது தேவைக்கு அதிகமாகவே நான் சம்பாதித்து விட்டேன். இனிமே எனக்கு புதிய படத்தில் இயக்க வாய்ப்பு வேண்டும், அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் கிடையாது. ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் வாய்ப்புகள் கிடைத்தாலும் சரி, கிடைக்கவில்லை என்றாலும் சரி, அது பற்றி கவலைப்பட மாட்டேன் என்று தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும் தகவல் அனுப்பிய நெல்சன் உடனே தனது டிவீட்டர் பக்கத்தில் இருந்து ரஜினிகாந்த் புதிய படத்தின் கவர் போட்டோவை நீக்கிவிட்டு டாக்டர் படத்தின் போட்டவை மாற்றி கெத்து காட்டினார். இதன் பின்பு நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் இயக்குனர் நெல்சன் உறுதி செய்யப்பட்ட பின்பு தனது டிவீட்டர் பக்கத்தில் தன்னுடைய பட வரிசையில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தையும் இணைத்து கொண்டார் நெல்சன்.
இந்நிலையில் ஒரு படம் தோல்வியை தழுவியதும் உடனே ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தில் இருந்து தன்னை தூக்கிவிடுவார்கள் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் வாய்ப்புக்காக கெஞ்சி கூத்தாடாமல், வாய்ப்பு கொடுத்தா கொடு, இலையென்றால் தேவையே இல்லை என திமிராக தகவல் அனுப்பி கெத்து காட்டிவிட்டார் நெல்சன் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.