சமீபத்தில் நடந்த மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் கமல்ஹாசனை நேரில் வைத்து கொண்டே, அவருடைய நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, அது பெரும் விவாத பொருளாக உருவெடுத்துள்ளது.
சுமார் 30 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட தேவர் மகன் திரைப்படம், எந்த ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ, அல்லது விளிம்பு நிலையில் இருக்க கூடிய மக்களுக்கு எதிராக, அந்த படத்தில் எந்த ஒரு காட்சியோ, வசனமோ இடம்பெறவில்லை. ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் நடக்கும் பங்காளி சண்டையை மையப்படுத்தியே தேவர்மகன் படத்தின் கதை அமைந்திருக்கும்.
தேவர் மகன் படத்தில் நடிகர் கமலஹாசன் நகர வாழ்க்கை வாழ்ந்து படித்து முடித்துவிட்டு தன்னுடைய காதலியுடன் சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவருடைய விருப்பம் மிகப்பெரிய அதிநவீன உணவகத்தை திறந்து தொழில் செய்ய வேண்டும் என்பதாக இருக்கிறது. ஆனால் இந்த கிராமத்தில் இதெல்லாம் செட் ஆகாது என்று கமல்ஹாசனுக்கு தெரிய வருகிறது. தன்னுடைய தந்தை பெரிய தேவரை நம்பி ஒரு பெரும் கூட்டம் அந்த கிராமத்தில் இருக்கிறது.
பெரிய படிப்பை படிச்சு முடித்துவிட்டு 300 வருஷம் பின் தங்கியுள்ள இந்த கிராமத்தில் தன்னுடைய படிப்பை வீணடிக்க வேண்டாம் என நினைக்கும் கமல்ஹாசன், விரைவில் இந்த கிராமத்தை விட்டு செல்ல வேண்டும் என முடிவு செய்கிறார், அதற்குள் பங்காளி சண்டையில் நடந்த அவமானத்தை தாங்க முடியாமல் பெரிய தேவர் இரண்டு விடுகிறார்.
தன்னுடைய நகர வாழ்க்கையை துறந்து பெரிய தேவர் இருந்த இடத்திற்கு வருகிறார் கமல்ஹாசன், அந்த கிராமத்தில் ஒரே சமூகத்தின் இடையில் நடக்கும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் இறுதிவரை முடியாமல், கொலை பழிக்கு ஆளாகி சிறைக்கு செல்லும் முன்பு, போதும்டா பிள்ளை குட்டிகளை படிக்க வைங்கடா என வீச்சருவாலும் , வேலு கம்பும் என வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு அறிவுரையை வழங்குகிறார் கமல்ஹாசன்.
தேவர் மகன் படத்தில் எந்த ஒரு இடத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அல்லது விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக காட்சிகள், வசனமோ இடம் பெற வில்லை, குறிப்பாக மாரி செல்வராஜ் சொல்வது போன்று, தேவர் மகன் படத்தை பார்த்து மிகவும் பாதிக்கப்பட்டதாக பேசுவது போன்று தேவர் மகன் படத்தில் எந்த ஒரு இடத்திலும் கட்சியே வசனமும் இடம் பெறவில்லை.
பூனே திரைப்பட கல்லூரியில் மிகச் சிறந்த படத்திற்கான தரவரிசையில் தேவர் மகனும் இடம்பெற்று இருக்கிறது. 5 தேசிய விருதுகளை வாங்கிய படம் தேவர் மகன். அந்த வகையில் மாரி செல்வராஜ், தேவர் மகன் படம் குறித்து மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் சர்ச்சை கூறிய வகையில் பேசியதற்கு பின்னணி காரணம் மாமன்னன் படத்தின் பப்ளிசிட்டிகாக தான் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
அந்த வகையில் தன்னுடைய இயக்கத்தில் வெளியாக இருக்கும் மாமன்னன் படத்தின் பப்லிசிட்டிகாக தான் மாரிசெல்வராஜ் பேசி இருந்தால், அதுவே அவர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் மாமன்னன் படத்திற்கு எதிர்ப்பை பெற்று தந்து வருகிறது, மேலும் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான கர்ணன் திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்று கொடுத்த நிலையில் மாமன்னன் படத்தின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் தேவர் மகன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாரிசெல்வராஜ் பேசியது, மாமன்னன் படத்திற்கு இருந்து வந்த எதிர்பார்ப்பை எதிர்ப்புகளால் மாற்றி, தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டார் மாரிசெல்வராஜ் என்று சொல்லும் அளவுக்கு அமைத்துள்ளது என்கின்றனர் சினிமா பார்வையாளர்கள்.