கற்றது தமிழ், தங்கமீன்கள், போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராம் உதவி இயக்குனராக சில படங்கள் பணியாற்றிய மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை மாறி செல்வராஜுக்கு பெற்று தந்தது. அடுத்த நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.
கர்ணன் படத்திற்கு அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள மாமன்னன் படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் கமலஹாசன் முன்னிலையில் தேவர் மகன் திரைப்படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு, அவரை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர், இயக்குனர், சக நடிகர்கள் என அனைவரிடமும், படைப்பிடிப்பு தளத்தில் முரண்பாடுகளுடம் செயல்பட்டு வந்ததின் விளைவு, ஒரு கட்டத்தில் வடிவேலுவின் இம்சை தாங்க முடியாமல், யாரும் அவரை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை, இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கினார் வடிவேலு.
இதன் பின்பு சுமார் 10 வருடங்களுக்கு பின்பு தற்பொழுது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் வடிவேலுக்கு சினிமா வாய்ப்புகள் அமைத்தது. ஆனால் வடிவேலுவின் நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை, பத்து வருடங்களுக்கு முன்பு எப்படி இயக்குனர்களுக்கும், தயாரிப்பளர்களுக்கும் இம்சை கொடுத்தாரோ.! அதே போன்று மீண்டும் ரீ – என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு செயல்பட்டு வந்துள்ளார்.
வடிவேலுவின் இம்சை தாங்க முடியாமல் அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள் படாத பாடு பட்டு வருகிறார்கள், சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் வடிவேலுவின் இம்சை தாங்க முடியாமல் பெருமளவு அவர் நடிக்கும் காட்சிகளை குறைக்கவும் முடிவு செய்துள்ளார் அந்த படத்தின் இயக்குனர் பி.வாசு, அதே போன்று வடிவேலு நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன் படம் மிக பெரிய தோல்வி படமாக வடிவேலுக்கு அமைத்தது.
அந்த வகையில் வடிவேலுவின் ரீ-என்ட்ரிக்கு தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது. வடிவேலுவின் அட்ராசிட்டியை எல்லை மீறி போவதால், புதிய பட வாய்ப்புகள் அவருக்கும் கிடைக்கவில்லை, இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் மாமன்னனாக வடிவேலின் கதாபாத்திரம் தான் குறிக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதியை விட அதிக முக்கியத்துவம் வடிவேலுவின் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாமன்னன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் வடிவேலுவின் கதாபாத்திரத்தை முன்னிறுத்தியே அப்பட குழுவினர் பேசி வருகிறார்கள். பொதுவாக ஒரு வடிவேலுவை காமெடியனாகவே தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பார்த்து வந்தனர். அந்த வகையில் மாமன்னன் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பதை, மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என்கின்ற சந்தேகம் எழுந்து வருகிறது.
அந்த வகையில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் அடைந்த வெற்றியை மாமன்னன் அடையுமா என்கின்ற சந்தேகம் வலுத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் ஒரு காமெடி நடிகரான வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது தான் என்றும், அந்த வகையில் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்வதை கோட்டை விட்டு விட்டார் மாரி செல்வராஜ் என்கின்றனர் சினிமா பார்வையாளர்கள்.