தேவையில்லாத பேச்சு… மாட்டிகிட்டு முழிக்கும் மாரி செல்வராஜ்… தேவையா இது.?

0
Follow on Google News

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு சிறப்பு விருந்திரைனராக வந்திருந்த கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் குறித்து மாரிசெல்வராஜ் பேசிய பேச்சு மிக பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. மாமன்னன்’ படம் உருவானதற்கு காரணமே ‘தேவர் மகன்’ படம்தான் என பேசிய மாரி செல்வராஜ்

மேலும் தேவர் மகன்’ பார்க்கும்போது எனக்கு வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்துமே ஏற்பட்டன. அந்த நாளை என்னால் கடக்கமுடியவில்லை. சினிமாவாக பார்த்த ஒரு படம் சமூகத்தை எப்படி புரட்டிப் போடுகிறது? என்னவெல்லாம் செய்கிறது? அது சரியா? தவறா? என்றெல்லாம் உழன்று கொண்டிருந்தேன் என பேசிய மாரி செல்வராஜ்.

‘தேவர் மகன்’ எனக்கு மிகப்பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கிய படம். அன்றைய காலகட்டத்தில் நடந்தவை எல்லாம் அப்படித்தான் ரத்தமும், சதையுமாக இருந்தன. இதை எப்படி புரிந்துகொள்வது? இந்தப் படம் சரியா? தவறா? என்று புரியாமல் அப்படி ஒரு வலி. இந்த ‘தேவர் மகன்’ உலகில் பெரிய தேவர் இருக்கிறார், சின்ன தேவர் இருக்கிறார். அதில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி முடிவு செய்து என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் ‘மாமன்னன்’.

தேவர் மகன் படத்தில் வடிவேலு நடித்த அந்த இசக்கி கதாபாத்திரம்தான் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படம்” என மாரி செல்வராஜ் கமல்ஹாசனை வைத்து கொண்டே மேடையில் பேசிய இந்த பேச்சு தற்பொழுது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இதில் மாரி செல்வராஜ் அறியாமையில் பேசிவிட்டாரா.? அல்லது தேவர் மகன் படம் இந்த சமூகத்திற்கு சொல்ல வரும் கருத்தை புரிந்து கொள்ள முடியாத ஒரு இயக்குனராக இருக்கிறாரா.? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம் மாமன்னன் என்று பேசிய மாரி செல்வராஜ்க்கு சமூக பார்வையாளர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள், அதாவது இசக்கி என்னும்
பெயர் தென் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பாலானோர் வைக்க கூடிய பெயர். இசக்கி என்னும் வடிவேலு பெரிய தேவர் வீட்டின் உள்ளையே போக கூடியவராக தான் இருப்பார்.

தேவர் மகன் படத்தில் கமலிடம் வடிவேல் யார் இந்த அக்கானு கவுதமியே கேட்கும் போது கூட,அக்கா இல்லை
உனக்கு அண்ணினு தான் சொல்லுவார் கமல்ஹாசன் தெரிவிப்பார். தேவர் மகன் படத்தில் வரும் ஒரு கட்சியில் வடிவேல் கோயில் பூட்டை உடைக்கும் போது கூட தெற்குத்தி கள்ளனடா தென் மதுரை
பாண்டியன்டானு சொல்லிட்டு தான் கோயில் பூட்டையே உடைப்பார் அந்த வகையில் இசக்கியாக நடித்த வடிவேலு, பெரிய தேவர், சின்ன தேவர் என அனைவரும் ஒரே சமூகம் போன்று தான் தேவர் மகன் படத்தின் கதை அமைத்திருக்கும்.

அந்த வகையில் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள், சமூக அக்கறையுடன் மீண்டும் ஒரு முறை தேவர் மகன் படத்தை பார்த்தால், தேவர் மகன் படத்தினால் அவருக்கு வலி ஏற்பட்டது என்று சொல்லும் மாரி செல்வராஜுக்கு ஒரு தெளிவான தீர்வு கிடைத்து அவருக்கு ஏற்பட்ட வலி காற்றில் பறந்து போகும் என்கிறார்கள் சமூக பார்வையாளர்கள்.

தேவர் மகன் படத்தில் எந்த ஒரு சாதிக்கும் எதிராகவோ, அல்லது இரண்டு சாதிக்கு இடையில் பிரச்சனையை உருவாகும் வகையில் தேவர் மகன் எடுக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தேவர் மகன் படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில்,

போதும்டா அருவாவா, கத்தியும் தூக்கிப்போட்டுட்டு புள்ளை குட்டிய படிக்க வைக்கடா என கமல்ஹாசன் பேசும் வசனம் யார் மனதை புண்படுத்தி இருக்கும் என்பதை தேவர் மகன் படத்தின் மீது வன்மத்தை கக்குகின்றவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஒரு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா என்பது, அந்த படத்தின் ப்ரோமோஷன்காக நடக்கும் நிகழ்வு, அந்த வகையில் அப்படி ஒரு நிகழ்ச்சியில் மிக கவனமாக பேசி அந்த படத்தை அணைத்து தரப்பினருடம் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் இருக்க கூடிய ஒரு இயக்குனர், சர்ச்சை கூறிய வகையில் பேசிய எதிர்ப்பை விலை கொடுத்து மாரி செல்வராஜ் பெற்றுள்ளார் என்பதை அவருக்கும் கிடைத்து வரும் எதிர்ப்பின் மூலம் உணரமுடிகிறது என்பது குறிப்பிடதக்கது.