திருமணத்துக்கு முன்பே லிவிங் டு கெதர் தான் பேஸ்ட்… மாரி செல்வராஜ் சொன்ன சிறந்த அட்வைஸ்…

0
Follow on Google News

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ளவர் இயக்குனர் மாரி செல்வராஜ். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர் திவ்யா என்ற பெண்ணை மணம் முடித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நவ்வி, யுவான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இவரும் இவரது மனைவி திவ்யாவும் யூட்யூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டி கொடுத்திருந்தனர்.

அந்தப் பேட்டியில் தன் காதல் எப்படி கல்யாணம் வரை சென்றது என்பது பற்றியும் தன்னுடைய வளர்ச்சிக்கு மனைவி எவ்வளவு உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பது பற்றியும் அவர் மணம் திறந்துப் பேசியுள்ளார். மாரிசெல்வராஜ் இயக்குனர் ராமிடம் 10 வருடங்களுக்கும் மேலாக உதவி இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார். இவர் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குனாராக அறிமுகமானார்.

2018ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் சிறந்த படம் என்ற பெயரைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷை வைத்து 2020 ஆம் ஆண்டு ‘கர்ணன்’ படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து 2023 இல் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ்ஆகியோர் நடித்த ‘மாமன்னன்’ படத்தை வெளியீட்டு தொடர் வெற்றி கண்டார்.

குறிப்பாக, மாமன்னன் படத்தின் வில்லனாக நடித்த பகத் பாசிலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. இப்படி அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் மாரிசெல்வராஜ், தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவை வைத்து படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், மாரி செல்வராஜ் மற்றும் அவரின் மனைவி திவ்யா இருவரும் தங்கள் காதல், திருமணம் பற்றி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவரது மனைவி, “மாரி செல்வராஜ் லவ் பண்ணிட்டு இருக்கும்போது நாங்க பேசுறதே ரொம்ப கஷ்டம். ஒரு நாளைக்கு ஒருமுறை பேசுவது என்பதே கஷ்டம். அந்த சமயத்திலும் நான் போன் பண்ணி தொல்லை பண்ணினது இல்லை. கல்யாணத்திற்கு பிறகு எங்களுக்குள் சண்டை வரும், ஆனால் காதலிக்கும்போது எப்படி இருந்தாரோ, அப்படித்தான் மாரி செல்வராஜ் இப்பவரைக்கும் இருக்காரு, அந்த அன்பு கொஞ்சம் கூட மாறவில்லை” என வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மாரிசெல்வராஜ், “நான் எங்க ஊருல ஆடு, மாடு மேய்த்து விட்டு கூலி வேலைக்கு சென்றிருக்கிறேன். அவ்வளவு பெரிய துன்பங்களை சந்தித்த நான் இன்று சினிமாவில் ஒரு இயக்குனராக வளர்ந்திருக்கிறேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்த போதுதான் திவ்யாவை சந்தித்தேன். நாங்க ஏழு வருஷம், ஒரே வீட்டுல ஒன்றாக வாழ்ந்தோம். அந்த லிவிங் டூ கெதர் வாழ்க்கை இப்ப இருக்குற அந்த புரிதலுக்கு காரணம். உண்மையிலேயே எங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கவே தோணலை.

ஏனென்றால், கல்யாணம் பண்ணிக்கிட்டா நிறைய கமிட்மெண்ட் இருக்கு. ஆனால் ஃப்ரண்ட்ஷிப்ல அதெல்லாம் கிடையாது. கல்யாண உறவில் எல்லாவற்றையும் கடமையாக மாற்றுகிறார்கள்.வீட்டில் சொன்னதால் தான் கல்யாணம் பண்ணிகிட்டோம். இக்கட்டான நேரத்தில் உறுதுணையாகவும், தவறிவிழாமல் பாதுகாக்கும் தோழியாகவும் திவ்யா இருந்தார். என் சுக, துக்கங்களுக்கான காரணம் என்னவென்று திவ்யாவுக்கு மட்டுமே தெரியும்” என அவரது மனைவி திவ்யா குறித்து நெகிழ்ந்துள்ளார்.