ரெட் கார்ட் கொடுத்த கமல்… புகைப்படம் வெளியிட்டு கமல்ஹாசனுக்கு தரமான பதிலடி கொடுத்த பிரதீப்..

0
Follow on Google News

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்ற வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றார்கள். இதற்கு முன்பாக சென்ற போட்டியாளர்களுக்கும், இவர்களுக்கும் சென்ற வாரம் முழுவதுமாக மோதல் போக்கு சென்று கொண்டிருந்தது. கூல் சுரேஷ், பிரதீப் மோதலும் அதிக கவனம் பெற்றது. தான் பேசியதற்கு பிரதீப் மனிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் வார இறுதியில் அனைவரும் ஐஷுதான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தனர், ஆனால் எதிர்பாராத விதமாக வைட்டு கார்டு போட்டியாளர் அன்னபாரதி வெளியேறினார். இந்நிலையில் மாயா, பூர்ணிமா, ரவீனா, நிக்ஸன் உள்ளிட்ட பிற போட்டியாளர்கள் வார இறுதி நாள் எபிசாேடில் உரிமை குரல் எழுப்பினர். பிரதீப்பால் பெண்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணுற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து அனைவரிடமும் கமல் தனித்தனியாக பிரதீப்பிற்கு ரெட் கார்டு காண்பித்து வெளியில் அனுப்பலாமா என்று கேட்டார். அதற்கு பெரும்பாலானோர் ஆம் சொன்னதால் பிரதீப் போட்டியில் இருந்து ரெட் கார்டுடன் வெளியேற்றப்பட்டார். பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், ரெட் கார்டு மூலம் தங்களின் அபிமான போட்டியாளரை வெளியேற்றுவது நியாயமற்றது என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனியை கமல் வெளியேற்றியது அன்ஃபேர் எவிக்ஷன் என முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களான பிரியங்கா தேஷ் பாண்டே, கவின், பாவனி ரெட்டி, நிவாஷினி மற்றும் சினேகன் உள்ளிட்ட பல தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப்பிற்கு கமல் பேசுவதற்கு கூட வாய்ப்பளிக்கவில்லை என ரசிகர்கள் சிலர் குற்றம்ச்சாட்டி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருந்தாலும் இந்த சீசனில் வலுவான போட்டியாளராகப் பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனி வெளியேறியிருப்பது பிக் பாஸ் ரசிகர்களை வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது. அவர் வெளியேறியதில் இருந்து pradeepantony என்ற ஹாஷ்டாக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப் பிக் பாஸ் 7 சீசனில் பெற்ற அனைத்து சிறிய பரிசு பொருட்களின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் மற்றும் SimpleStar என்ற ஹேஷ்டேக்குடன் “இது தான் என்னால் திரட்ட முடிந்தது” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப் ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரெட் கார்டை முன் வைத்து தன் குடும்பத்துடன் போஸ் கொடுத்துள்ளார் பிரதீப். மற்றொரு பதிவில் பிரதீப், வடிவேலு காமெடி வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில், ‘என்னுடைய விளையாட்டிற்கு சமூக வலைதளத்தில் கிடைத்த வரவேற்பை கண்டு எனக்கு இப்படி தான் இருந்தது. கூட நின்னதுக்கு நன்றி, என்னால முடிஞ்ச அளவுக்கு ஒரு நல்ல ஆர்ட்டிஸட்டாக ஆக முயற்சி பண்றேன். நல்லா இருங்க, அடுத்த வேலைய பார்ப்போம்” என்று பதிவிட்டு உள்ளார் .

மேலும் மற்றுமொரு பதிவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தானே சொல்லி விரட்டிவிட்டீர்கள் என அனைத்து வயது பெண்களுடனும் சேர்ந்து ரெட் கார்டுடன் கொண்டாடியிருக்கிறார் பிரதீப். நான் மோசமானவனாக இருந்தால் எந்த பெண்ணும் என் அருகில் வர மாட்டார். இப்பொழுது என்ன சொல்கிறீர்கள் பிக் பாஸ் என்பது போன்று இருக்கிறது பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு கொண்டாட்டம். பொம்பள விஷயத்தில் புகார் தெரிவித்து வெளியே அனுப்பியபோதிலும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி சமூக வலைதளத்தில் எதுவும் மோசமாக பேசவில்லை.

இதனை பார்த்த ரசிகர்கள் சிலர், பிரதீப் ரெட் கார்டு வாங்கியதை குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றார் என பேசி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் தான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. மேலும் ஒரு சில ரசிகர்கள் பிரதீப் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இதன் மூலம் தரமான பதிலடி கொடுத்திருப்பதாகவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் என்னதான் பிரதீப் பிக் பாஸ் டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் பல ரசிகர்களை அவர் சம்பாதித்துள்ளார் என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது.