இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், மிகப் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் கடந்த நிலையிலும் கூட அணைத்து திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள மணிரத்தினத்தினம் எடுத்துள்ள பொன்னியின் செல்வன் கதை அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான தமிழர்களின் இல்லங்களில் இடம்பெற்று இருந்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்த ஒவ்வொரு தமிழனுக்கும் திரைப்படம் போன்று காட்சிகளை கண் முன்னே நிறுத்தியது கல்கியின் எழுத்து வடிவம். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்து அந்தக் கதையில் ஒன்றிப்போன தமிழர்களுக்கு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை திரையில் காண்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் தான் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மிக பெரிய விளம்பரத்தை பெற்று தந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் கதைக்கு சொந்தமான அமரர் கல்கிக்கு உரிய மரியாதையை மணிரத்தினம் தரவில்லை, அவருடைய கதையை கூட மூலக்கதை என்றுதான் பொன்னியின் செல்வன் படம் முடியும் பொழுது குறிப்பிட்டிருப்பார்கள்.
ஆனால் பொன்னியின் செல்வன் படம் திரையில் ஆரம்பிக்கும் பொழுது கல்கியின் புகைப்படத்தை வைத்து மலர் தூவி இந்த படம் தொடங்கியிருக்க வேண்டும். மேலும் பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழா, ட்ரைலர் வெளியீட்டு விழா, டீசர் வெளியீட்டு விழா போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கல்கியின் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்திய பின்பு அந்த நிகழ்ச்சியை தொடங்கி இருக்க வேண்டும், ஆனால் தொடர்ந்து பொன்னியின் செல்வன் கதைக்கு சொந்தமான கல்கி புறக்கணிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் பொன்னியின் படம் முடிவில் மூலக்கதை கல்கி என்று குறிப்பிட்டது பின்னணியில் மணிரத்தினத்தின் மிகப்பெரிய அயோக்கியத்தனம் வெளிப்பட்டுள்ளது. இதை மணிரத்தினம் திட்டமிட்டு செய்துள்ளார் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள், மேலும் அவர்கள் கூறுகையில், தமிழக அரசு கல்கியின் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை மட்டும் தன நாட்டுடைமையாக்கி உள்ளது.
ஆகையால் அந்தப் புத்தகத்தை யார் வேண்டுமானாலும் அச்சிட்டு விற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தொலைக்காட்சி தொடர், வெப் சீரியஸ் அல்லது சினிமாவாக எடுத்தால் நிச்சயமாக கல்கியின் குடும்பத்திற்கு அந்தக் கதைக்கான காப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டும். அப்படி கல்கியின் குடும்பத்திற்கு பணம் கொடுக்கக் கூடாது என்பதற்காக தான் படம் முடியும் தருவாயில் மூலக்கதை கல்கி என்று குறிப்பிட்டுள்ளார் மணிரத்தினம்.
மேலும் படம் தொடங்குவதற்கு முன்பும், இதற்கு முன்பு நடைபெற்ற பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் அனைத்திலும் கல்கியின் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தாமல் கதைக்கு சொந்தமான கல்கியை புறக்கணிக்க காரணமும் இதுதான் என கூறப்படுகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை தழுவி மணிரத்தினம் எடுத்திருந்தாலும், இதில் சில செயற்கையாக மணிரத்தினம் சில காட்சிகளை இணைத்துள்ளார்.
இது கல்கி குடும்பத்தினர் ஏதாவது பிரச்சனை செய்தால், இது கல்கியின் பொன்னியின் செல்வன் கதை அல்ல என்று கூறுவதற்காக தான் மணிரத்தினம் இவ்வாறு செய்துள்ளதாக கூறுகிறார்கள். இந்தநிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினியின் சூது வாதுவை விட மிக பயங்கரமாக உள்ளது. கல்கியின் குடும்பத்திற்கு விபூதி அடித்த மணிரத்தினத்தின் அயோக்கியத்தனம் என்கின்ற ஒரு கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது