உதயநிதியை வெளியேற்றிய மணிரத்தினம்… உதயநிதி – மணிரத்தினம் இடையில் நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில், சுமார் 500 கோடி பொருட் செலவில் மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். இது பேன் இந்தியா படம் என பொன்னியின் செல்வன் பட குழுவினரால் விளம்பரம் செய்யப்பட்டது. இருந்தும் தமிழகத்தை தாண்டி பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரிய அளவில் எந்த ஒரு வரவேற்பும் இல்லை.

மேலும் இனிவரும் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் மக்கள் வரவேற்பை பொறுத்து பிற மொழிகளில் இந்த படத்திற்கான வியாபாரம் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தை அதன் தயாரிப்பு நிறுவனம் லைக்காவிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு அந்தப் படத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் கிடைக்கும் லாபத்தில் லைக்கா நிறுவனத்திற்கு 70 சதவிகிதம் மணிரத்தினத்திற்கு 30 சதவீதமும் சதவீதம் என்கின்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் மணிரத்தினத்திற்கு இயக்குனருக்கான சம்பளம் கிடையாது. பொதுவாக மணிரத்தினம் இயக்கும் படங்களில் லைக்கா நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி லாபத்தில் பங்கு என்கிற அடிப்படையில் அவருக்கான பணத்தை பெற்று வருகிறார்.

இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயின் நிறுவனத்திற்கு வழங்க லைக்கா நிறுவனம் ஈடுபட்டது. தொடர்ந்து ரெட் ஜெயின் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் லைக்கா மற்றும் உதயநிதி இருவருக்கும் ஏற்பட்ட சுமூக முடிவின் காரணமாக ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பர போஸ்டரில் ரெட் ஜெயன்ட் லோகோவும் இடம்பெற்றது.

ஆனால் ரெட் ஜெயின் நிறுவனத்திற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையை லைக்கா நிறுவனம் கொடுத்தது அந்த படத்தின் இயக்குனர் மணிரத்தினத்திற்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான KGF, RRR, விக்ரம் போன்ற படங்கள் தமிழக திரையரங்குகளில் பெரும் வசூலை அள்ளி குவித்தது இதில் RRR மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்களையும் ரெட் ஜெயன்ட் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை பெற்று வெளியிட்டது.

தமிழக திரையரங்குகளில் அதிக வசூலை வாரி குவித்த இந்த இரண்டு படத்தின் கணக்கை, முறையாக அந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்து தனக்கான கமிஷனை பெற்றனர் ரெட் ஜெயண்ட் நிறுவனம். இதுவரை திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களை ஏமாற்றி வந்ததை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியீடுகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இதனால் பொன்னியின் செல்வன் படத்திற்கும் முறையான லாபத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்று தருவார்கள் என்கிற நம்பிக்கையில் லைக்கா நிறுவனம் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு கொடுத்தது. ஆனால் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட்டால் திரையரங்குகளில் கிடைக்கும் வசூலில், ஒரு குறிப்பிட்ட கமிஷன் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும்.

மேலும் திரையரங்குகளில் படம் சரிவர போகவில்லை என்றால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது, என்கிற அச்சம் இயக்குனர் மணிரத்தினத்திற்கு உண்டு. அதனால் முன்கூட்டியே பொன்னியின் செல்வன் படத்தை அவுட்ரேட் விற்பனை செய்தால், படம் வெளியாவதற்கு முன்பே ஒரு பெரும் தொகை லாபமாக நமக்கு கிடைக்கும், என்பதால் ரெட் ஜெயின் நிறுவனத்துக்கு தமிழக விநியோக உரிமையை கொடுக்கக் கூடாது என்பதில் மணிரத்தினம் உறுதியாக இருந்துள்ளார்.

இந்த பிரச்சனை லைக்கா மற்றும் மணிரத்தினம் இருவருக்கும் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில். சமீபத்தில் சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு மணிரத்தினம் அழுத்தத்தின் காரணமாக பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியேற்ற பட்டுள்ளது. இதனால் தற்பொழுது வெளியாகும் பொன்னியின் செல்வன் விளம்பர போஸ்டர்களில் ரெட் ஜெயன்ட் லோக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.