தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குனராக இருந்து வந்தவர் மணிரத்தினம். சினிமா துறையினரால் மணி சார் என்று அன்புடன் அழைக்கப்படும் மணிரத்தினம் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு நடிகனுக்கும் உண்டு. அந்த வகையில் ஒரு காலத்தில் மிக பெரிய உச்சத்தில் இருந்து வந்தவர் மணிரத்தினம். நடிகர்கள் மாதவன்,அரவிந்த் சாமி போன்ற நடிகர்களை சினிமாவுக்கு அடையாளம் காட்டியவர் மணிரத்தினம்.
1983ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய முதல் கன்னட படம் பல்லவி அணு பல்லவி முதல் 2002ம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான கண்ணத்தில் முத்தமிட்டால் வரை சுமார் 20 வருடம் வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வந்த மணிரத்தினம் கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியை மட்டுமே சந்தித்து, ஒரே ஒரு வெற்றி படம் கொடுத்து விட வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவருடைய இயக்கத்தில் திரைக்கு வர தயாராக இருக்கும் படம் பொன்னியின் செல்வன், சோழ மன்னர்களின் கதையை மய்யமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் பேன் இந்தியா படம் என விளம்பர படுத்தப்பட்டு வருகிறது, இதில் நடிகர்கள், விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, சரத்குமார், நடிகை திரிஷா, ஐஸ்வர்யா ராய், மற்றும் பலர் என எண்ணிக்கையில்லா பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், பாகுபலியை மிஞ்சும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளது என தம்பட்டம் அடிக்கப்பட்டாலும், இந்த படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை, மேலும் பேன் இந்தியா படம் என கூறப்படும் பொன்னியின் செல்வன் படத்தை பிற மொழிகளில் விற்க முடியமால் தவித்து வருகிறது தயாரிப்பு நிறுவனம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் கூட வரவேற்பு இல்லாத நிலையில் இந்த படம் மிக பெரிய தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழர்களின் உணர்வூகளை தூண்டி படத்தை ஓட வைக்கலாம் என்கிற நோக்கில், இது தமிழர்களின் பெருமையை உலகிற்கு சொல்லும் படம், ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என படத்தை ஓட வைக்க இந்த யுக்தியை கையாண்டு வருகின்றனர் பட குழுவினர். இது குறித்து தமிழ் ஆர்வாளர்கள் கூறுகையில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை பார்க்கும் போது, உண்மை கதையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் மணிரத்தினம் என தோன்றுகிறது.
அதனால் இவர் நோக்கில் எதாவது ஒரு படத்தை எடுத்துவிட்டு இது தான் தமிழரின் வரலாறு என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. ஆகையால் இது தமிழனின் வரலாற்று படம் கிடையாது, வழக்கம் போல் மணிரத்தினம் படம் தான், படத்தை ஓட வைக்க மணிரத்தினம் தலைகீழான நின்று தண்ணீர் குடித்தாலும் இங்கே ஏதும் கதைக்கு ஆகாது என தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.