ஜெயம் ரவியின் சின்ன ஆசைக்கு கூட தடை போட்ட மணிரத்தினம்… குடும்பத்துடன் சோகத்தில் மூழ்கிய ஜெயம் ரவி..!

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் ஒரு முடிவு எடுத்து விட்டால் அந்த விஷயத்தில் உறுதியாக இருப்பார். அந்த வகையில் பெரும் பணச் செலவில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பல விஷயங்களில் கரார்ராக இருக்கின்றார் மணிரத்தினம். முதலில் பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ஸ் மூவிஸ் மூலம் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் செய்ய உரிமம் வழங்கப்பட்டது.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை அதன் தயாரிப்பு நிறுவனம் நேரடியாக வெளியிட வேண்டும் என்பதில் மணிரத்தினம் உறுதியாக இருந்ததால், இந்தப் படத்தில் இருந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியேற்றப்பட்டது. அதே போன்று பொன்னியின் செல்வன் படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் திரையரங்குகளுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார் மணிரத்தினம்.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில், அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தை விட ஒரு பைசா கூட கூடுதலாக வசூலிக்க கூடாது என்கின்ற கண்டிஷன் உடன் அனைத்து திரையரங்களுக்கும் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் விற்பனை செய்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அனைத்து தரப்பு மக்களும் திரையரங்குகளில் வந்து பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வேண்டும்.

கூடுதலாக டிக்கெட் விற்பனை செய்தால் பொன்னியின் செல்வன் படம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையாது என்கின்ற நோக்கத்தில் மணிரத்தினம் இவ்வாறு செய்துள்ளார். இதே பார்முலாவை பிற மாநிலத்திலும் கடைபிடித்து, பிற மொழி பேசுகின்றவர்கள் மத்தியிலும் பொன்னியின் செல்வன் படம் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக மணிரத்தினம் கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியிடம், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர் அனைவரும், பொன்னியின் செல்வன் படத்தை தனியாக உறவினர் மற்றும் குடும்பத்தினர் மட்டும் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கென்ன ஏற்பாடு செய்துவிடுவோம் என ஜெயம் ரவி தெரிவிக்க, செம்ம மகிழ்ச்சியில், எதிர்பார்ப்பிலும் இருந்துள்ளனர் ஜெயம் ரவி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்.

இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடம், பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனான நடித்துள்ள ஜெயம் ரவி, தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்த படத்தை தனியாக பார்க்க அடையாறில் உள்ள ஒரு திரையரங்குகளில் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்து தர வேண்டும், அதற்கான செலவை தான் ஏற்று கொள்கிறேன் என்று கேட்டுள்ளார் ஜெயம் ரவி.

ஆனால் இதற்கு லைக்கா நிறுவனம், எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, எதற்கும் இயக்குனர் மணிரத்தினத்திடம் சென்று நீங்கள் பேசுங்க, அவருக்கு ஓகே என்றால், நீங்க சொன்ன அதே இடத்தில் சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மணிரத்தினத்தை நேரில் சந்தித்து தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.

ஆனால், மணிரத்தினம் அதற்கெல்லாம் முடியவே முடியாது, மக்களோடு மக்களாக திரையரங்குகளில் சென்று இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் காரர்ராக தெரிவித்துவிட்டாராம், இந்த நிலையில் ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆசையை நிறைவேற்ற மீண்டும் ஒருமுறை மணிரத்தினத்திடம் பேசி உள்ளார்.

ஆனால் அதற்கு மணிரத்தினம் முடிவே முடியாது என்று தெரிவித்துவிட்டு, குரோம்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்குகளில் வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்தை உங்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பார்த்துக் பார்ப்பதற்கு, அந்த திரையரங்குகளில் உள்ள பாதி டிக்கெட்டை வாங்கி கொள்ளுங்கள், மற்றபடி தனியாக உங்களுக்காக மட்டும் சிறப்பாக படத்தை வெளியிட முடியாது என திட்டவட்டமாக மணிரத்தினம் தெரிவித்துவிட்டார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தினரின் இந்த சின்ன ஆசையை கூட நிறைவேற்ற முடியவில்லை என்கிற கவலையில் ஜெயம் ரவி, மற்றும் தனியாக குடும்பத்தினர் மற்றும் உறவினர் மட்டும் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கலாம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்த ஜெயம் ரவி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.